Sun. Nov 24th, 2024
https://nallarasu.com/eps-vs-ops-2/
https://nallarasu.com/ops-upset/
https://nallarasu.com/eps-is-winner/
https://nallarasu.com/eps-suppoter-anger-aginst-sasikala-dinakaran-ops/
https://nallarasu.com/sasikala-story-2/
https://nallarasu.com/edapadi-challange/

மேலே உள்ள அத்தனை செய்திகளும்,, சசிகலாவையோ, தினகரனையோ மீண்டும் அதிமுக.விற்குள் சேர்ப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ற தகவல், நமக்கு கிடைத்தது நேற்று இன்று அல்ல. கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின் போதே, முதல்வரின் தொலைநோக்குப் பற்றி, அவருடன் 24 மணிநேரமும் இருப்பவர்கள் மூலம் நமக்கு கிடைத்துவிட்டது.

சசிகலா, தினகரன் இல்லாத அதிமுக.வை கட்டமைப்பதற்கான வழியை முதல்வர், அந்த தேர்தலின் வெற்றி மூலம் கண்டறிந்துவிட்டார்.

இன்றைய அரசியலில், கட்சியை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன், சசிகலா, மற்றும் இதர தலைவர்களைவிட எளிய மனிதாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்பதுதான், தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான மக்களின் கருத்து.

பா.ஜ.க. வுடனான கூட்டணியும், மத்திய அரசுக்கு அடிபணிந்து நடப்பதும்தான் அவருக்கு எதிரான விமர்சனமாக இருக்கிறது. வரும் தேர்தலில் அவரது தலைமையிலான அதிமுக கூட்டணி ஒருவேளை வெற்றிப் பெற்றுவிட்டால்,அப்போதுதான் அவரது ஆளுமையின் குணம் முழுமையாக வெளிப்படும். வரும் காலங்களில் அவர் சக்தி மிக்க தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்வார்.

சசிகலாவைப் பற்றி அவர் கடைசியாக உதிர்த்த வார்த்தைதான், சசிகலா எல்லாம் ஒரு ஆளா என்பது. அதை தனது ஆதரவாளர்கள் மூலமே கேட்ட பிறகுதான், இனிமேலும் அசிங்கப்பட வேண்டாம் என்ற எண்ணத்தில், மனம் நொந்துதான் சசிகலா ஒதுங்கிவிட்டார்.

ஒருவேளை அதிமுக தோல்வியை தழுவினால், அப்போதும் அக்கட்சி எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வத்தை அடையாளம் காட்டினார். ஆனால், பணம் செலவழிப்பதில் கஞ்சத்தனத்தை காட்டியதாலும், நிர்வாகிகள், தொண்டர்களை அரவணைப்பதில் காட்டிய அலட்சியத்தாலும், அவர் பின்னால், பெரும்பாலான நிர்வாகிகள் அணிவகுக்கவில்லை.

ஆனால் எடப்பாடி பழனிசாமியை தெரிந்தோ, தெரியாமலோ சசிகலா அடையாளம் காட்டிவிட்டார். தொடக்கம் முதலே, பணத்தை தண்ணீராக வாரி இறைத்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். கட்சியையும் மெல்ல, மெல்ல தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார். மாநில அரசியலும், டெல்லி அரசியலும் அவருக்கு அத்துபடியாகி விட்டது.

தலைவர் பதவி ஓ.பி.எஸ்.ஸை தேடி வந்தது அவர் அதை தக்க வைத்து கொள்ளாமல் கோட்டை விட்டார். எடப்பாடிக்கு கொடுக்கப்பட்டது. கடந்த நான்காண்டுகளில் அரசியல், ஆட்சி என்ற இரட்டை குதிரை சவாரியின் லகானை லாவகமாக கையாண்டு, மிகுந்த தேர்ச்சி பெற்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி.. அவரின் வளர்ச்சிக்கு தடையாக யார் இருந்தாலும் தூக்கியெறிந்து விட்டு செல்லும் இரும்பு மனநிலைக்கு வந்துவிட்டார் எடப்பாடியார்.

இனிமேல் அதிமுக என்றால் எடப்பாடி, எடப்பாடி என்றால் அதிமுக என்று நிலைதான். இதில் சமசரமோ, விட்டுக் கொடுத்தலோ எடப்பாடியாரை பொறுத்தவரை சாத்தியமே இல்லை….மேலே குறிப்பிட்டுள்ள கட்டுரைகள் மூலம் அதைதான் ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களிலேயே நாம் தெளிவாக பதிவு செய்திருக்கிறோம்..

நாம் வெளிப்படுத்திய அளவுக்குக் கூட தமிழகத்தில் உள்ள அச்சு ஊடகங்களோ, காட்சி ஊடகங்களோ ஆணித்தரமாக சொல்லவில்லை என்பதுதான் நல்லரசு செய்திகளுக்கு கிடைத்த பெருமை.

படை பரிவாரங்களை வைத்திருப்பவர்கள் கோட்டை விட்ட தளங்களிலும் நல்லரசு தமிழ் செய்திகள் ஸ்கோர் செய்திருக்கிறது என்பதுதான் உண்மை…

நிறைவாக சொல்கிறோம். நாம் எழுதிய ஒவ்வொரு கட்டுரையும் சத்தியத்தின் வழியில் நின்று,, பத்திரிகை தர்மத்தின் வழியில் நின்று எழுதியவை… நாம் யார் சார்பாகவும் இல்லை என்பதை ஒவ்வொரு வார்த்தையிலும், வரியிலும் வெளிப்படுத்தியிருக்கிறோம். அந்த வகையில் நமது ஊடகப் பணியை மிகுந்த நேர்மையுடன் செய்திருக்கிறோம் என்பதில் மிகுந்த மகிழ்ச்சிதான் நல்லரசு தமிழ் செய்திகளுக்கு….

நல்லரசு தமிழ் செய்திகளின் கட்டுரைகளோடு, பிற ஊடகங்களின் கட்டுரைகளையும் ஒப்பிட்டு பார்த்து தீர்ப்பு சொல்லுங்கள்.. அதுவே, எங்களுக்கு பலம் தருபவை……