பழனிச்சாமி என்ற பெயரைச் சொன்னாலே, கரப்பஷனின் (ஊழல், முறைகேடு) வாரிசு என்று சொல்லும்படியாகி விட்டது. அரசு மதுபானக் கடையான டாஸ்மாக், மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசே, மதுபானங்களை நேரடியாக விற்பனை செய்வது மூலம், அந்த துறையில் நடக்கும் கோல்மால், ஊழல், முறைகேடு என அத்தனை சட்டவிரோதமான செல்யல்களுக்கும் கலால் துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சர் பி.தங்கமணிதான் பொறுப்பாவார் என பொதுமக்கள் பொத்தம் பொதுவாக பேசுவார்கள். ஆனால், பி.தங்கமணி வசம் உள்ள கலால் துறையிலேயே வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் 500 கோடி ரூபாய் அளவுக்குமேல் கடந்த 5 ஆண்டுகளில் ஊழலில ஈடுபட்டுள்ளார் என்று குமறுகிறார்கள், அவரது துறையிலேயே பணியாற்றி வரும் நேர்மையான அதிகாரிகள்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்தான், அரசு மதுபானக் கடைகளின் அன்றாட செயல்பாடுகளை நிர்வகித்து வருகிறது. தமிழகம் முழுவதும் 5000 த்திற்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் (டாஸ்மாக்) உள்ளன. ஒவ்வொரு கடைக்கும் தலா 3 பேர், அதாவது விற்பனையாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் என்ற அடிப்படையில், 15 ஆயிரம் பணியாளர்கள், தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் அனைவரும் நேரடியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருபவர்கள்.
இவர்களை மேய்க்க, மாவட்டந்தோறும் மாவட்ட மேலாளர்கள் (district manager) என்ற பதவியில் அரசு அதிகாரி ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர், வருவாய் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருபவர். மூன்று அல்லது நான்கு மாவட்டங்களை இணைத்து முதுநிலை மண்டல மேலாளர் என்ற அரசு அதிகாரி நியமிக்கப்படுகிறார். அவரும் வருவாய் துறையின் கட்டுப்பாட்டின் கீழ்தான் வருகிறார்
இந்த இரண்டு அதிகாரிகளின் நிர்வாகப் பொறுப்பையும் கண்காணிக்கிற அதிகாரத்தை தன் வசம் வைத்துள்ள, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்தான், ஆண்டுதோறும் டாஸ்மாக் மூலம் நூறு கோடி ரூபாய மூலம் கலலா கட்டியுள்ளார் என்று பயங்கர குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள், தமிழ்நாடு வாணிய கழகத்தின் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள். அவர்கள் கூறும் அத்தனை தகவல்களும் அதிர்ச்சி ரகம்.
5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மதுபானக் கடைகளுக்கு , நாள்தோறும் சப்ளை (விநியோகிக்கப்படும்) மதுபானங்களுக்கான, அதன் தயாரிப்பாளர்கள், குறிப்பாக சாராய வியாபாரிகள், தங்கள் மதுபானங்களை அரசு மதுபானக் கடைகளில் விற்பனை செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கமிஷனாக, டாஸ்மாக் பொறுப்பை வைத்திருக்கும் அமைச்சருக்கு காலம்காலமாக வழங்கி வருகின்றனர். இதில் அரசியல் எல்லாம் பார்ப்பது கிடையாது. ஏனெனில், மதுபான தயாரிப்பு ஆலைகளை அதிமுக பிரபலங்களும் நடத்தி வருகின்றன. திமுக பிரமுகர்களும் சொந்தமாக வைத்திருக்கின்றனர்.
அதிமுக அரசைப் பொறுத்தவைர மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை, அவரின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலாவிடமே மொத்த கமிஷன் தொகையும் வழங்கப்பட்டு வந்ததாம். அந்த நேரத்தில், பிசிறு போல, ஒரு சதவிகிதமோ, இரண்டு சதவிகிதமோ என்ற அளவுக்குதான் அந்த துறையை கைவசம் வைத்திருந்த அமைச்சருக்கு கிடைத்து வந்ததாம்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கலால் துறை அமைச்சர் பி.தங்கமணி வசம் வந்துவிட்டது. கடந்த ஐந்தாண்டுகளாக யாருக்கும் பங்கு பிரித்து தராமல், ஒட்டுமொத்தமாக அவரே ஸ்வாஹா செய்து வருகிறாராம். இப்படி ஒருபக்கம் டாஸ்மாக் வருமானம், அவருக்கு சென்றுக் கொண்டிருக்க, மறுபக்கம் டாஸ்மாக் ஊழியர்களை மேய்ப்பதன் மூலம் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் கல்லா கட்டி வருவதுதான், இந்த கட்டுரையின் சிறப்பு.
தி.மு.க. ஆட்சி என்றாலும் சரி, அ.தி.மு.க. ஆட்சி என்றாலும் சரி.. டாஸ்மாக் ஊழியர்கள், மாவட்ட மேலாளர்கள், முதுநிலை மண்டல மேலாளர் என அனைவருமே ஒரே ஒரு நபரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்களாம். அந்த திருவாளரின் பெயர்தான் திருப்பூர் பழனிச்சாமி. இவர், அரசியல்வாதியா, முன்னாள் ஓய்வுப் பெற்ற அரசு அதிகாரியா, என்ன சாதி, யாருக்கு உறவு என ஒரு விவரமும் யாருக்கும் தெரியாது. ஆனால், டாஸ்மாக் கடை விற்பனையார் முதல் டாஸ்மாக் நிர்வாக இயக்குனரான ஐ.ஏ.எஸ்., வரை ஆயிரக்கணக்கானோரும் திருப்பூர் பழனிசாமியின் கைபேசி எண்ணை (செல்போன்) கண்டால் அலறுகிறார்களாம்.

94421 94432 என்ற இந்த செல்போன் எண்ணிற்கு சொந்தக்காரரான திருப்பூர் பழனிசாமி, கடந்த ஆறுமாதமாக யார் யாருடன் பேசினார், என்ன பேசியிருக்கிறார் என்ற விவரங்களை (ஆவணங்களாக ) நம்மிடம் கொடுத்து, அவரின் லீலைகளை விவரித்தபோது, மயக்கம் போட்டே விழுந்துவிட்டோம் நாம்.
ஒரு மாவட்டத்தில் பணிபுரியும் மாவட்ட மேலாளர், மற்றொரு மாவட்டத்திற்கு பணிமாறுதல் பெற விரும்பினால், திருப்பூர் பழனிசாமியின் தரிசணத்திற்காக காத்து கிடப்பார்களாம். குறைந்தது 20 லட்சம் ரூபாய் அழுததால்தான் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பணிமாறுதல் கிடைக்குமாம். மேலும், ஒருவர் பணிமாறுதல் பெற்றுச் செல்லும்போது, அந்த மாவட்டத்தில் பணியாற்றி வரும் மற்றொரு மாவட்ட மேலாளர், வேறு மாவட்டத்திற்கு செல்வார் அல்லவா, அவரும் குறிப்பிட்ட சில லட்சங்களை திருப்பூர் பழனிசாமிக்கு அழ வேண்டியிருக்குமாம்.
இப்படி, வருடத்திற்கு 10 மாவட்ட மேலாளர்களை பணிமாற்றம் செய்வதால் மட்டுமே, சுளையாக 2 கோடி ரூபாய் வசூலித்து விடுவாராம் திருப்பூர் பழனிசாமி. அதுபோலவே, முதுநிலை மண்டல மேலாளர் பணியிட மாற்றத்திலும் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வசூலித்துவிடுவாராம். சரி, 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து பணிமாறுதல் பெற்று செல்லும் மாவட்டச் மேலாளர்களுக்கு என்ன லாபம் கிடைத்து விடும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா… அங்கேதான் நாள்தோறும் டாஸ்மாக் மூலம் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவுக்கு கமிஷன் தொகை கிடைத்து வருகிறதாம்.அதை ஆட்டையைப் போடதான் 20 லட்சம் ரூபாயை லஞ்சமாக வழங்கி மாறுதல் பெறுகிறார்களாம் மாவட்டமேலாளர்கள் என்கிறார்கள்.
ஒரு மாவட்டத்தில் 200 டாஸ்மாக் கடைகளுக்கு குறையாமல் இருக்கிறது. ஒரு கடையில் சராசரியாக நாள் ஒன்று 2லட்சம் ரூபாய் அளவுக்கு மதுபானம் விற்பனை ஆகும் என்பதால், அந்த ஒரு கடையில் இருந்து மட்டுமே 5 ஆயிரம் ரூபாய் கமிஷனாக மாவட்ட மேலாளருக்கு கொடுத்து விட வேண்டுமாம். ஒரு கடைக்கு 5 ஆயிரம் ரூபாய் என்றால் ஒரு மாதத்திற்கு 200 கடைக்கும் சேர்த்து, 10 லட்சம் ரூபாய் மாதத்திற்கு அல்வா மாதிரி 3 கோடி ரூபாய் கமிஷனாக மட்டுமே, மாவட்ட மேலாளர்களுக்கு கிடைக்குமாம். 5 ஆயிரம் ரூபாய் எப்படி கிடைக்கும் என்கிற சந்தேகம் வருகிறது அல்லவா. ஒரு பாட்டில் மதுபானம் விற்றால், 5 ரூபாயில் இருந்து பத்து ரூபாய் வரை கூடுதல் விலைக்குதான் சரக்கை விற்கிறார்கள் டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்கள். இந்த பகல் கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்குதான், மண்டல மேலாளர்களுக்கு கமிஷன் தொகை வழங்கப்படுகிறது.
மாவட்ட மேலாளர்களுக்கு கிடைக்கும் கமிஷன் தொகையில், நான்கில் மூன்று பங்கு, திருப்பூர் பழனிசாமியிடம் ஒப்படைக்கப்படுமாம். அவர் அதை அப்படியே வருவாய் துறை அமைச்சருக்கு ஒப்படைத்துவிடுவாராம். கமிஷன் தொகையை வாங்கி, அதில் கை வைக்காமல் அப்படியே ஒப்படைப்பதால்தான், எந்த ஆட்சி வந்தாலும் திருப்பூர் பழனிசாமியின் கொடியே உயர, உயர பறக்கிறதாம்.
படையப்பா படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த்துக்கும், செந்திலுக்கும் இடையே வரும் காமெடி மாதிரி, மாப்பிள்ளை செந்தில்தான், ஆனா அவரு போட்டிருக்கிற சட்டை என்னுது என்று ரஜினி சொல்கிற டைலாக் மாதிரி, டாஸ்மாக் துறை அமைச்சர் பி.தங்கமணிதான், ஆனால் அந்த துறையை பயன்படுத்தி கோடிக்கணக்கில் கமிஷன் பார்ப்பது வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்தான் என்கிறார்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தைச் சேர்ந்தவர்கள்.
வெற்றி நடைபோடுகிறது தமிழகம்..கரப்ஷினிலா என்று எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்வி, நியாயமானதுதானே….