டி.ஜி.பி. ராஜேஷ் தாஸுக்கு எதிராக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கொடுத்துள்ள பாலியல் தொந்தரவு தொடர்பான வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் நடைபெறும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
பெண ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்துவிசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று காலை நீதிபதி ஆன்நத் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது. அப்போது, இந்த வழக்குத் தொடர்பாக பிற்பகலில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார் நீதிபதி.
அதன்படி நண்பகலுக்குப் பிறகு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதன் விவரம் இதோ…
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும்…
விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
ஐபிஎஸ் பெண் அதிகாரி ஒருவர் புகார் கொடுப்பதற்கு இவ்வளவு அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார் என்றால்,,சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன?
இந்த விவகாரம் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது,அதனால் தான் அரசியலமைப்பு சட்டம் நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி
வழக்கு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது
ஊடகங்கள் இதை விவாத பொருளாக்க
வேண்டாம்.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் பெயரை யாரும் பயன்படுத்தவோ வெளியிடவோ கூடாது..
பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் கொடுத்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல்
தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்யப்படுவதாகவும் நீதிபதி ஆன்ந்த வெங்கடேஷ், தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.