சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூடடத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கடன் தள்ளுபடிக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கலாம். தமிழக அரசின் நகை கடன் தள்ளுபடி குறித்து அமைச்சரவை கூடித்தான் முடிவு எடுக்க வேண்டும். தமிழக அரசின் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பில் விதி மீறல் உள்ளது/
அதிமுக தலைமையிலான அரசு வெற்றுப் பேச்சு அரசு. இதற்கு பின்னணி குரல் தருபவர்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர்தான்.
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைக்கும் கட்சிகள் அனைத்துமே மறைமுகமாக பாஜகவுடன் பேசி வருகிறார்கள்.
பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. பொதுமக்கள் முணுமுணுத்துக் கொண்டே பெட்ரோல் டீசலை போட்டுச் செல்கின்றனர்.இதுபோன்ற மக்கள் விரோத திட்டங்களை அமல்படுத்தி வரும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு, தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
தமிழகத்தில் தாமரை ஒருபோதும் மலராது. பாஜக எனும் நச்சு செடி வேரூன்ற தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். என் கடைசி மூச்சுவரை பாஜகவை எதிர்ப்பேன்.
இவ்வாறு ப. சிதம்பரம் பேசினார்.