Fri. Nov 22nd, 2024

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை அறிவித்தார், தலைமைத் தேர்தல் ஆணையர், சுனில் அரோரா

ஏப்ரல் 6 ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.. மே 6 ஆம் தேதி வாக்கு எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரியிலும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

வேட்புமனு தாக்கல் தொடக்கம் –  12.03.21

வேட்புமனு தாக்கல் நிறைவு – 19.03.21

வேட்புமனு  பரிசீலனை – 20.03.21

வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் – 22.03. 21 

 தேர்தல் நாள் : 06.04.21

வாக்கு எண்ணிக்கை : 02.05.21

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏல. 6 ல் நடைபெறுகறிது.

தமிழ்நாடு, கேரளா புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

அனைத்து மாநிலங்களிலும் வாக்களிப்பதற்கு கூடுதலாக 1 மணிநேரம் வழங்கப்படும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக 30 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவிட வேண்டும்.

சிறப்பு அதிகாரியாக அலோக் வரதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

88 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன.

பிரசாரத்தின் போது 5 வாகனங்களுக்கு மேல் பயன்படுத்தப்படக் கூடாது.

வாக்குச்சாவடிகளில், வெக் காமிராகள், வீடியோ காமிராக்கள் பொறுத்தப்படும்…

தேர்தல் செலவின பார்வையாளர்களாக தமிழகத்திற்கு மதுமாஜன், பாலகிருஷ்ணா ஆகிய 2 அதிகாரிகள் நியமனம்..

வேட்பாளருடன் வாக்கு சேகரிக்க 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என கடடுப்பாடு விதிப்பு..

தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் கொரோனோ தடுப்பூசி கட்டாயம்.

தேர்தல் நடைத்த விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

அசாமில் 3 கட்டமாக தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை மே 2

கேரளாவில் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம்தேதி

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

மார்ச் 27, ஏப்.1, 6,10, 17, 22, 26, 29 ஆகிய தேதிகளில் 8 கட்டமாவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் அதுபற்றிய விவரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும் .

திருவிழா, பண்டிகை, தேர்வுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டே தேர்தல் அட்டவணை தயாரிப்பு.

தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

புதுச்சேரியில் தொகுதிக்கு ரூ.22 லட்சம், மற்ற 4 மாநிலங்களில் ரூ.30.8 லட்சம் மட்டுமே தேர்தல் செலவு செய்ய அனுமதி

வாக்குச்சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை:

வேட்பாளர் அல்லது வாக்காளராக இருந்தால் வாக்குச்சாவடிக்கு அமைச்சர்கள் செல்லலாம்.

சாதி, மத, மொழி, இன ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பரப்புரை செய்யக்கூடாது.

வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பரப்புரை செய்யக் கூடாது.

மாற்று கட்சியின் கொள்கை, செயல் திட்டங்கள், ஆட்சியை விமர்சிக்கலாம்.

மாற்று கட்சியின் தனி நபர்களின் சொந்த வாழ்க்கையை விமர்சிக்க கூடாது.

General Elections to Assembly of Tamilnadu, 2021 – All elections to 38 Districts consisting of 234 ACs be held in a single phase as follows:

Issue of Notification12-03-2021
Friday
Last Date of Nominations19-03-2021
Friday
Scrutiny of Nominations20-03-2021
Saturday
Last Date of Withdrawal of Candidature22-03-2021
Monday
Date of Poll06-04-2021
Tuesday
Counting of Votes02-05-2021
Sunday