Fri. Nov 22nd, 2024

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள வன்னியர்களுக்கு, உள்ஒதுக்கீடாக 10.5. சதவிகிதம் வழங்கும் மசோதா, சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மிகவும் பிறப்படுததப்பட்டோர் பிரிவில், வன்னியர்கள் உள்பட பல்வேறு சாதியினரை உள்ளடக்கி, தனியாக 20 சதவிகிதம் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு தனியாக உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களையும் பா.ம.க. முன்னெடுத்தது. அதன் ஒருபகுதியாக நடைபெற்ற ரயில் மறியல் போராட்டததின் போது பல்வேறு பகுதிகளில் அசம்பாவித சம்பங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், உள்ஒதுக்கீடு தொடர்பாக, டாக்டர் ராமதாமை அமைச்சர்கள் குழு தைலாபுரத்திற்கே இரண்டு முறை சென்று பேச்சுவார்த்தை நடத்தியது. தொடர்ந்து, சென்னையிலும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது-

இதனிடையே, இன்று மாலை தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் அறிவிக்கப்படும் என தகவல் வெளியானதையடுத்து, அவசர, அவசரமாக சட்டமன்றப் பேரவையில், வன்னியர்களுக்கு தனியாக உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். இதில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனியாக 10 புள்ளி 5 சதவிகித தனி ஒதுக்கீடு (உள்ஒதுக்கீடு ) வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், சீர்மரப்பினருக்கு 7 சதவிகிதம் தனி இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவும் சட்டமன்றததில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரண்டு மசோதாக்களும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.