வீராதி வீரராக வேடம் கட்டிய தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலையின் தில்லு, இரண்டு நாள் டெல்லி பயணத்திற்குப் பிறகு காற்று போன பலூன் போல காணாமல் போய்விட்டதாக பாரதிய ஜனதா மூத்த நிர்வாகிகள் வெளிப்படையாக பேச தொடங்கிவிட்டார்கள்.
அதிமுகவையும், அதன் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடியாரை பகைத்துக் கொண்டது தற்கொலைக்கு சமமானது என்றும் தண்ணீரில் நனைந்த வெத்து வேட்டு அண்ணாமலை என்றும் கடந்த 2 ஆண்டுகளாக அவரை கொண்டாடிக் கொண்டிருந்த பிரபல யூ டியூப்பர்கள் மாரிதாஸ், கோலாகல ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோரும் பிரபல ஊடகவியலாளரும் சாணக்யா டிவி நிறுவனருமான ரங்கராஜ் பாண்டேவும் இன்றைக்கு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் கே.அண்ணாமலையால் கூட்டப்பட்ட அக்கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டம், அவரின் டெல்லி பயணத்தால் தள்ளி வைக்கப்பட்டு, அக்டோபர் 5 ஆம் தேதி சென்னையில் கூடி கலைந்திருக்கிறது.
பாரதிய ஜனதா ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த நிர்வாகிகள் பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்பட பலரும், கூட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான மாநில, மாவட்ட நிர்வாகிகளும் துக்க வீட்டிற்கு சென்று வந்ததைப் போன்ற உணர்வுடன் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
டெல்லி பயணம் தந்த அவமானத்தால் உடல்நிலை சரியில்லை என்று பத்து நாட்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு லீவு போட்டுவிட்டு தமது வீட்டிலேயே முடங்கி கொண்டார் கே.அண்ணாமலை. பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது தொண்டர்களின் முடிவு என்று மீண்டும் மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் உறுதிபட தெரிவித்து வருவதால், அதிமுக தொண்டர்கள் புதிய எழுச்சியுடன் கட்சிப் பணிகளை உற்சாகமாக மேற்கொள்ள தொடங்கிவிட்டார்கள். ஆனால், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், யாருக்கு எதிராக அரசியல் களமாடுவது என்று தெரியாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலோ, சட்டமன்றத் தேர்தலோ அதிமுக கூட்டணி இல்லாமல் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்ற உண்மையை உணர்ந்திருக்கிற பாஜக தொண்டர்கள், ஆளும்கட்சியான திமுகவுக்கு எதிராக தனியாக நின்று அரசியல் செய்வது எப்படி என்று தெரியாமல் புலம்ப தொடங்கிவிட்டார்கள். பாரதிய ஜனதா நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டு, டெல்லி பயணம் பற்றியும் உள்துறை அமித்ஷா, அகில இந்தியாபாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருடனான சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் பற்றியெல்லாம் பகிர்ந்து கொள்வார்கள் என்று மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அண்ணாமலை, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை எல்லாம் பாஜக மேலிட தலைவர்கள் அறிவிப்பார்கள். அதுவரை, மாநிலம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சிக்கும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பில் அமர்த்துவதற்கும் பொதுமக்களின் ஆதரவை திரட்டுங்கள் என்று மட்டுமே கூறிவிட்டார்.
தேதிய முற்போக்கு கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியவிட்ட பிறகு, கடந்த மாதத்தில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து பங்கேற்றவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் எம்பி, ஆகியோர் கூட இன்றைய தேதியில் பாரதிய ஜனதாவை நம்பி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் உறுதியாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாமல் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
வடமாநிலங்களில் மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை ஹிந்தி பேசும் மக்களிடம் இருந்தாலும் கூட , தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மத்தியில் பாஜக அரசு அமைந்துவிடுமோ என்ற அச்ச உணர்வில்தான் பெரும்பான்மையான மக்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
2024 நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் மீதான நம்பிக்கையை மட்டுமே நம்பி, இன்றைய தேதியில் பாரதிய ஜனதாவோடு நெருக்கம் காட்டி வருகிற டாக்டர் கிருஷ்ணசாமியோ, ஏ.சி.சண்முகமோ, பாரிவேந்தரரோ, ஜான் பாண்டியனோ எம்பி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று விட முடியுமா என்பதை மிகுந்த சந்தேகத்திற்குரிய ஒன்றாகதான் பார்க்கிறார்கள். 100 கோடி ரூபாயை செலவிட்டாலும் கூட பாரதிய ஜனதா தொண்டர்களை நம்பி தேர்தல் பணியாற்றிவிட முடியாது என்ற உண்மை, களத்தில் நிற்கிற தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதானல் தான் அதிமுகவை அண்ணாமலை தூக்கி எறிந்த போதும் கூட, ஜிகே வாசனோ, ஏசி சண்முகமோ, டாக்டர் கிருஷ்ணசாமியோ, ஜான் பாண்டியனோ, பாரிவேந்தரோ அதிமுகவை உதறிவிட்டுவிட்டு பாஜகவை முழுமையாக நம்பி களத்தில் நிற்க தயங்குகிறார்கள். மோடி 3 வது முறையாக பிரதமர் பதவியில் அமர்வதற்கு வாக்களியுங்கள் என்றால், தமிழக வாக்காளர்கள் கண்ணை மூடிக் கொண்டா ஓட்டு போட்டு விட மாட்டார்கள் என்ற உணமையை நன்கு அறிந்து வைத்திருப்பவர்கள் பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள்.
அரசியலில் நீண்ட அனுபவம் உள்ள ஜி.கே.வாசனுக்கு, ஏ.சி.சண்முகத்திற்கு, டாக்டா கிருஷ்ணசாமிக்கு, ஜான் பாண்டியனுக்கு தெரிகிற உண்மை, பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கிற அண்ணாமலையின் மண்டையில் உரைக்காமல் இருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை என்று கோபமாக கேட்கிறார்கள் தமிழக பாஜக மூத்த நிர்வாகிகள்.
கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளராக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூட பாரதிய ஜனதா வாக்குகளை மட்டுமே நம்பி வெற்றி பெற்றுவிட முடியாது என்ற உண்மையை உணர்ந்து கொண்டிருக்கிறார். கூட்டணியில் அதிமுக இருந்தால், அவர் எம்பி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி.
அதிமுக கூட்டணி பலத்தோடு போட்டியிட்டால், கடந்த இரண்டு காலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு காரணமாக, 3 அல்லது 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக, தேர்தல் கள அரசியலில் அனுபவம் உள்ளவர்கள் கூறுகிறார்கள். இன்றைய தேதியில், பாஜக இல்லாமல் தனித்தே அதிமுக நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டால் கூட குறைந்த பட்சம் 10 எம்பி தொகுதிகளில் அதிமுக எளிதாக வெற்றி பெற்று விடக் கூடிய நிலைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. கள யதார்த்தத்தை எடப்பாடியார் உணர்ந்து கொண்டததால் தான் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக பெற்ற வாக்குகளை ஆதாரமாக சுட்டிக்காட்டி, சேலம், சிதம்பரம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, வேலூர், காஞ்சிபுரம், கடலூர் என 8 தொகுதிகளில் அதிமுக தனித்து போட்டியிட்டாலும் எம்பி தேர்தலில் வெற்றி பெற்றுவிடும் என அடித்து கூறுகிறார்.
அண்ணாமலை போல எடப்பாடியார் அரசியலில் கத்துக்குட்டி இல்லை. 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மாபெரும் இயக்கமான அதிமுகவின் பொதுச் செயலாளர். தமிழ்நாட்டில் ஆலமரம் போல நிலையாக, நிரந்தரமாக நின்றுக் கொண்டிருக்கும் செல்வாக்கு மிகுந்த அதிமுகவின் பொதுச் செயலாளர். 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்தே பரப்புரை மேற்கொண்டு 66 தொகுதிகளில் அதிமுக எம்எல்ஏக்கள் வெற்றி பெறுவதற்கு பரப்புரை மேற்கொண்டவர் எடப்பாடியார். எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோரின் ஆளுமையால் அதிமுக தழைத்து விருட்சகமாக வளர்ந்து நின்றாலும் கூட, அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று குறுகிய காலத்தில் தன்னை ஆளுமையாக எடப்பாடியார் நிரூபித்ததால்தான், 2021 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி எனும் தகுதியை பெற்றது.
எடப்பாடியாரோடு ஒப்பிடும் போது அண்ணாமலை ஒரு சோளக்காட்டு பொம்மை. காக்கா, குருவிக்கு பூச்சாண்டி காட்டுவதற்காக உருவகப்படுத்தப்பட்டதுதான் சோளக்காட்டு பொம்மை. முறுக்கு மீசை, சிகப்பு நிற கண்கள் என ஓவியம் தீட்டினாலும் கூட சோளக்காட்டு பொம்மை ஒருபோதும் விரனாக களத்தில் நின்று விட முடியாது.
அப்படிபட்ட நிலையில்தான் இன்றைக்கு அண்ணாமலை காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தாலும் கூட, உலகளவில் பிரதமர்மோடி அபூர்வமான தலைவராக போற்றப்பட்டாலும் கூட தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு அவர்களின் கணக்குள்கு மாபெரும் தலைவராக மோடி தெரிய மாட்டார். ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தான் கண்களுக்கு தெரியும். அன்றாட வாழ்க்கையை கடத்துவதே மிகவும் சிரமமாக இருக்கும் தொழிலாளர்களுக்குபெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் கேஸ் விலை உயர்வு போன்ற பிரச்னைகள் தான் தலை தூக்கி, பாரதிய ஜனதாவுக்கு எதிராக வாக்களித்து விடும் என்பதை அண்ணாமலை உணர்ந்து கொண்டதாகவே தெரியவில்லை.
பாத யாத்திரை என்ற பெயரில் ஒரு நூறு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே நடந்து விட்ட பொது மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டேன். ஓட்டுக்கு காசு கொடுக்கவில்லை என்றால கூட தாமரை சின்னத்தை தேடி தேடி வாக்களிப்பார்கள் என்ற காது குத்து வேலையை அண்ணாமலை உடன் இருக்கும் எடுபிடிகள் கூட நம்ப மாட்டார்கள்.
ஆளும்கட்சியான திமுகவுக்கு என்றைக்குமே போட்டியாக களத்தில் நிற்பது அதிமுக தான். நான்கு ஆண்டு காலம் முதல் அமைச்சர் பதவி.. இரண்டரை ஆண்டு காலம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்து வரும் எடப்பாடியார் என்ற ஆளுமையை கிள்ளுக்கீரை போல நினைத்துக் கொண்டு அண்ணாமலை பேசிக் கொண்டிருந்தால், அவரது அரசியல் வாழ்வுதான் சூன்யமாகி போகும் என்பதை உணர்ந்து கொள்வதற்கு 2024 வரை அண்ணாமலை காத்திருக்க வேண்டும்.