இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மையம் வெளியிட்டுள்ள அவிறிப்பு விவரம்…..
தமிழக முதல் அமைச்சர் 110 விதியின் கீழ் அரசு ஊழியர் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி இன்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிவிப்புக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது
இளைஞரின் வேலை வாய்ப்பை பறிக்கும் இத்தகைய தமிழக அரசு அறிவிப்பு ஒட்டுமொத்த இளைஞனுடைய சமூகத்தை சீரழிக்கும் பணியை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது
தமிழக அரசு துறைகளில் நான்கரை லட்சம் பணியிடங்கள் தொடர்ந்து காலியாக இருக்கும் பட்சத்தில் இப்படிப்பட்ட அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறதுஎந்த அரசு ஊழியர் அமைப்புகளும் இக்கோரிக்கையை தமிழக அரசிடம் முன் வைக்கவில்லை
அப்படி இருக்கும் போதுபுதிய பென்சன் திட்டம் ரத்து செய்யப்படவேண்டும் தொகுப்பு முறையை ரத்து செய்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் பறிக்கப்பட்ட அகவிலைப்படி சரண்டர் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டம் வேலை நிறுத்தம் முற்றுகைப் போராட்டம் உண்ணாவிரதம் போன்ற இயக்கப் பணிகளில் அரசு ஊழியர் ஆசிரியர் போராடிகொண்டிருக்கும்போது கோரிக்கைகளை பரிசீலிக்காமல் அழைத்து பேசாமல் தான் தோன்றித் தனமாகஇப்படி அறிவித்திருப்பது ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
எனவே தமிழக அரசு 60 வயது உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் அதோடு மட்டுமில்லாமல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நீண்ட நாள் கோரிக்கையை உடனடியாக அழைத்து பேசி தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழக அரசை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.