Sat. Nov 23rd, 2024

திமுக ஆட்சியோ.. அதிமுக ஆட்சியோ, அரசு துறைகளில் சிறப்பான முக்கியத்துவம் பெறுவது செய்தி மக்கள் தொடர்புத் துறை தான்.

தமிழ்நாடு அரசில் 50 க்கும் மேற்பட்ட துறைகள் இருந்தாலும், அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாக இருப்பதும் செய்தி மக்கள் தொடர்புத் துறை தான்.

கூடுதல் சிறப்பாக, தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என பக்தியோடு வணங்கும் அர்த்தநாரீஸ்வரர் போல, செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கும் ஊடகத்துறைக்கும் பிரிக்க முடியாத பந்தம் காலம் காலமாக இருந்து வருகிறது. 

முதல் அமைச்சர் மற்றும் துறை அமைச்சர்கள் அறிமுகப்படுத்தும் புதிய திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள், ஆய்வுக் கூட்டங்கள், சுற்றுப்பயணங்கள், நலத்திட்ட உதவிகள் என அனைத்து வகையான செயல்பாடுகளையும் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதில் முதன்மையான இடத்தில் உள்ளது செய்தி மக்கள் தொடர்புத்துறைதான்.

முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தை விட கடந்த 18 மாத கால திமுக ஆட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை புதிய பரிமாணங்கள் எட்டியிருக்கிறது.  

2010 ஆம் ஆண்டில் சமூக ஊடகங்கள் புது பாய்ச்சலோடு வேகம் எடுத்து, ஆண்டுக்கு ஆண்டு பொதுமக்களிடம் அதிக அளவிலான ஈர்ப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு அரசும் சமூக ஊடகங்களை பெரியளவில் பயன்படுத்த துவங்கியது. முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் அரசு துறைகள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்று வந்தாலும் கூட, முதல் அமைச்சர் மற்றும் துறை அமைச்சர்களின் அன்றாட செயல்பாடுகளை நொடிக்கு நொடிக்கு விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

முதல் அமைச்சரின் அன்றாட செயல்பாடுகளை செய்திக் குறிப்புகள், புகைப்படங்கள் வாயிலாக மட்டுமின்றி ஒளிப்பதிவு காட்சிகளாக வழங்குவதிலும் நவீனத்துவத்தை கையாள தொடங்கியிருக்கிறது செய்தி மக்கள் தொடர்புத்துறை.

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை  இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயலசீலன் ஐஏஎஸ்ஸின் தனித்த ஈடுபாட்டின் காரணமாக, செய்தித்துறையின் செயல்பாடுகள் மெருகு ஏறியிருக்கின்றன.

தலைமைச் செயலகம் தொடங்கி மாவட்ட தலைநகரங்களில் பணியாற்றி வரும் மக்கள் தொடர்பு அதிகாரிகளின் பங்கு மகத்தானது.

மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் தொடர்பு அதிகாரி என்பது முக்கியமான பதவியாகும்.  

மாநகராட்சி அலுவலகங்களிலும் பிஆர்ஓ பதவியில் அலுவலர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.

மக்கள் தொடர்பு அதிகாரிகள் அனைவருமே அரசியல் குடும்ப பின்னணி கொண்டவர்கள்தான் என்பது எல்லோருமே அறிந்த ஒன்றுதான்.

மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கு பணி மூப்பு அடிப்படையில் உதவி இயக்குனர், துணை இயக்குனர், இணை இயக்குனர், கூடுதல் இயக்குனர் என்ற முறையில் பதவி உயர்வுகள் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகின்றன.

செய்தி மக்கள் தொடர்பு துறையின் இயக்குனர் பதவிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

அவருக்கு மேல் அதிகாரியாக, செய்தி மக்கள் தொடர்பு துறையின் செயலாளராக இருப்பவரும் ஐஏஎஸ் அதிகாரி தான்.

பிஆர்ஓ அந்தஸ்துக்கு அடுத்த நிலையில் உள்ள உதவி இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், கூடுதல் இயக்குனர்கள் பெரும்பாலும் சென்னையில்தான் பணியாற்றி வருகிறார்கள்.

சென்னை ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி ஆணையர் அலுவலகம், அரசு நினைவகங்கள், கலைவாணர் அரங்கம் போன்றவற்றிலும் மக்கள் தொடர்பு அதிகாரிகள் தான் பணியாற்றி வருகிறார்கள்.

தமிழக அரசின் தலைமை நிர்வாக அலுவலகமான தலைமைச் செயலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரி முதல் கூடுதல் இயக்குனர் வரையிலான பதவிகளில் 50க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தேவர் சாதி அலுவலர்களின் ஆதிக்கம்….

சென்னையில் பணிபுரிந்து வரும் ஏறக்குறைய 100 அதிகாரிகளில் பாதிக்கு மேற்பட்டோர், ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்ற தகவலை நல்லரசு வாசகர் ஒருவர் அனுப்பி வைத்துள்ளார்.  

அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் சாதாரண பணியாளர்கள் முதல் உயர் அதிகாரிகளான ஐஏஎஸ் அதிகாரிகள் வரை யாருடைய ஜாதகத்தையும் ஆராய்ந்து பார்க்கும் குணம் நல்லரசுக்கு எப்போதுமே இருந்தது கிடையாது.

 ஆனால் குறிப்பிட்ட ஒரே சாதிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக ஒரே அலுவலகத்தில் அல்லது ஒரே ஊரில் வசிக்கின்ற போது, மற்ற சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை என்பதால், அதே செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பணியாற்றி வரும் பிற சமுதாயத்தைச் சேர்ந்த பணியாளர்கள், அலுவலகர்கள் மனம் வருத்தத்தில் உள்ளதாக கூறுகிறார்கள்.

செய்தித் துறையில் உள்ள முக்கியமான பதவிகள் அனைத்திலும்  முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கமே தலைதூக்கியுள்ளது என்று கூறி ஒரு பட்டியலை நல்லரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

பட்டியலை ஒரு மூச்சில் வாசிக்க முடியாத அளவுக்கு மிக மிக நீளமாக இருக்கிறது.

திரு. சிவ சரவணன், கூடுதல் இயக்குனர் செய்தி தலைமைச் செயலகம்

திரு. அன்புச் சோழன்,  கூடுதல் இயக்குனர் மக்கள் தொடர்பு தலைமைச் செயலகம்

திரு. தமிழ் செல்வராஜன் நினைவகம் இணை இயக்குனர் தலைமைச் செயலகம்

திரு. கலைச்செல்வன் உதவி இயக்குனர் நினைவகம் தலைமைச் செயலகம்

திரு. அண்ணா இணை இயக்குனர் தமிழரசு இதழ். சென்னை

திரு. கிரிராஜன் இணை இயக்குனர் மெட்ரோ ரயில் சென்னை

திரு. வெற்றிச்செல்வன் இணை இயக்குனர் சென்னை மெட்ரோ வாட்டர் சென்னை

திரு. நடராஜன் உதவி இயக்குனர் இந்து சமய அறநிலைத்துறை சென்னை

திரு. கலைநேசன் உதவி இயக்குனர் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம்  சென்னை

திரு. அருணகிரி மக்கள் தொடர்பு அலுவலர் வணிகவரித்துறை  அலுவலகம் சென்னை

திரு. ராமகிருஷ்ணன் மக்கள் தொடர்பு அஅலுவலர் மாநில தேர்தல்  ஆணையம் சென்னை

திரு. ரகுலன் மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்நாடு  மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சென்னை

திரு. செ.கோவலன் மக்கள் தொடர்பு அலுவலர் தலைமைச் செயலகம்

திரு. அன்பரசன், பொருட்காட்சிப்பிரிவு

திரு. பேச்சிமுத்து உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தலைமைச்செயலகம்

திரு. மணிமேகலை மக்கள் தொடர்பு அலுவலர் தமிழரசு இதழ், சென்னை.

திரு. ஆ.ராஜா துணை இயக்குநர் , கூட்டுறவுத்துறை , சென்னை

திரு. செந்தில் அண்ணா மக்கள் தொடர்பு அலுவலர்

 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

திரு. நல்ல தம்பி மக்கள் தொடர்பு அலுவலர் போக்குவரத்துக் கழகம் தர்மபுரி

திரு. பாண்டியன் போக்குவரத்துக்கழகம் , கும்பகோனம்

திரு. வெற்றி வேந்தன் மக்கள் தொடர்பு அலுவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விருதுநகர்

திரு. நவீன் பாண்டியன் மக்கள் தொடர்பு அலுவலர் தூத்துக்குடி மாவட்டம்

திரு. கருப்பண்ண ராஜவேல் மக்கள் தொடர்பு அலுவலர் கரூர்

திரு. நாகராஜ பூபதி மக்கள் தொடர்பு அலுவலர் விழுப்புரம் திரு. பாண்டி

மக்கள் தொடர்பு அலுவலர் ராமநாதபுரம் மாவட்டம்

திரு. மகேஷ்  மக்கள் தொடர்பு அலுவலர் மதுரை மாநகராட்சி

இப்படி தேவர் சமுதயாத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வரும் இடங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்குவதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று தொடர்ந்து முழங்கி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்தியாவிலேயே சமூக நீதிக் கொள்கைகளுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருப்பதும் திராவிட இயக்கங்களின் ஆட்சிகள்தான்.

நீதிமன்றம், மத்திய அரசு துறைகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டும் தமிழக அரசியல் கட்சிகள், தமிழக அரசில் முக்கியத்துவம் வாய்ந்த துறையில் ஒரே ஒரு சமுதாயத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதும், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசுத்துறைகளின் முக்கியத்துறைகளில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆக்கிரமித்து இருப்பதால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்களுக்கு உரிய இடமும், உரிய மரியாதையும் கிடைப்பதில்லை என்று வருத்ததோடு கூறுகிறார்கள்.

திராவிட மாடல் ஆட்சியின் பிதாமகன் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்திலேயே எதிரொலிக்கும் சமத்துவமற்ற நிலைக்கு எதிரான குரல்களுக்கு செவி மடுப்பாரா? 

தமிழ்நாடு அரசின் செய்தித்துறையா…

‘தேவர் சாதித்’ துறையா?

திராவிட மாடல் ஆட்சிக்கு அழகா., இது?

என்று கேள்விக்கு விரைவில் கிடைக்குமா….

காத்திருப்போம்…..