Sat. Nov 23rd, 2024

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மதுரையில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்க வைத்தார். மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ அண்ணாதோப்பு மாநகராட்சி ஆதிமூலம் ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிற்றுண்டிகளை வழங்கினார். அவர்களுடன் தரையில் அமர்ந்து சிற்றுண்டியை சுவைத்த முதல்வர், தனது இருபுறமும் அமர்ந்திருந்த குழந்தைகளுக்கு சிற்றுண்டியை ஊட்டி நேசத்தை பகிர்ந்து கொண்டார்.

முன்னதாக சிற்றுண்டி திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை இதோ….

பசித்த வயிறுக்கு உணவு, தவித்த வாய்க்கு தண்ணீராக இருக்கும் திட்டம் தான் காலை சிற்றுண்டி திட்டம்”

“எத்தகைய நிதிச்சுமை இருந்தாலும் பசி சுமையை போக்குவதே முதல் இலக்கு”

நிதிச்சுமை இருந்தாலும் பசிச்சுமையை போக்க காலை உணவு திட்டம்.

எத்தகைய நிதிச்சுமை இருந்தாலும் பசிச்சுமையை போக்க முடிவு எடுத்து காலை உணவு திட்டத்தை துவக்கியுள்ளோம்.

பசியோடு வரக்கூடிய ஏழை குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தின் மூலம் முதலில் உணவு வழங்க உள்ளோம்.

காலை உணவு வழங்கும் திட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் திட்டம்.

வாழ்நாளில் பொன்னாள் என்று சொல்லக்கூடிய அளவில் இந்த நாள் அமைந்துள்ளது.

பள்ளிக்கு பசியோடு வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்கு செல்லும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.