Sat. Nov 23rd, 2024

மின்சார வாரியத்திற்கு கடந்த பத்தாண்டுகளில் கடன் தொகை பன்மடங்கு அதிகரிப்பால், தவிர்க் க முடியாமல் மின் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியார்களிடம் அமைச்சர் கூறியதாவது:

தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும்

200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக மின் கட்டணம் மாற்றம்.

மாதம் 301 – 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 உயர்த்த பரிசீலனை.

500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதல் மின் கட்டணம்.

கேஸ் இணைப்பை போல, 100 யூனிட் இலவச மின்சாரத்தை நுகர்வோர் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் புதிய திட்டம் அறிமுகம்.

ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு என கொண்டு வர திட்டம்.

குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத்தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின்கட்டண உயர்வு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதன் முழு விவரம் இதோ…

press-release-18-07-22-tamil-final