Sat. Nov 23rd, 2024

போக்குவரத்துத் துறையில் ஒரு பிரிவான வட்டார போக்குவரத்துத்துறையில் ஊழல் தலை விரித்து ஆடுகிறது என்பது பொதுமக்களின் பொதுவான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

எந்த ஆட்சியாக இருந்தாலும் அதிகாரிகளின் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்பது அடிக்கடி நடைபெறும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி வேட்டைகள் மூலம் அம்பலத்திற்கு வருவதும் வாடிக்கையான ஒன்று..

உணவு இல்லாமல் கூட இருந்து விடுவார்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், பணியாளர்கள் என்பதும் ஆனால் லஞ்சம் வாங்காமல் ஒருநாள் உயிர் வாழ முடியாது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதை உண்மையாக்கும் விதமாக திமுக ஆட்சியில் லஞ்ச பணம் பெறுதல் மற்றும் ஊழல் புகார் களில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் சிக்கு வது அதிகரித்து வருகிறது..

கடந்த மாதத்தில் சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்துத் துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள துணை ஆணையர் நடராஜன் அலுவலக அறையில் ரூ. 35 லட்சம் ரூபாய் லஞ்சப்பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.. பதவி உயர்வு வழங்குவதற்காக லஞ்சம் வசூலித்து அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ்நாத் கண்ணப்பனிடம் ஒப்படைப்பதற்காக அலுவலகத்தில் வைத்திருந்ததாக அவர் போலீஸ் விசாரணையின் போது தெரிவித்ததாக பரபரப்பாக பேசப்பட்டது..

அந்த பரபரப்பு அடக்குவதற்கு முன்பாகவே மற்றொரு உயர் அதிகாரி லஞ்சம் வசூலித்த புகாரில் சிக்கியிருப்பதுதான் அதிர்ச்சி க்குரிய அம்சமாகும்..

கோவை மண்டல இணை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று நடத்திய சோதனையில் ₨28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

லஞ்சப் பணம் பெற்ற புகாரில் கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையர் உமாசக்தியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

முதற்கட்ட விசாரணையில் ஓய்வுபெற்ற அலுவலக உதவியாளர் செல்வராஜ் உதவியுடன் பல மாதங்களாக லஞ்சம் பெற்று வந்தது தெரிய வந்துள்ளது..