மத்திய அரசுக்கு எதிராக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் நாடு தழுவிய வகையில் அகில இந்திய பொது வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழக போக்குவரத்துத் துறை கட்டுப்பாட்டில் உள்ள போக்குவரத்து கழக பணியாளர்கள் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும் என மாநில போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.
போக்குவரத்துறை விடுத்துள்ள அறிவிப்பு:
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் ஊழியர்கள் விடுமுறை எடுக்க அனுமதி கிடையாது.
ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகளும் ரத்து செய்யப்படும்.
போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய செயலாகும்.
பணிக்கு வருகை தரவில்லை எனில் ‘ஆப்செண்ட்’ மார்க் செய்யப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும். என்றும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசிற்கு எதிராக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் அகில இந்திய பொது வேலை நிறுத்தப்போராட்டம் அறிவிக்கப்ட்டுள்ள நிலையில், போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.