அதிமுக தொடங்கிய திட்டங்களை திமுக நிறுத்துவது போன்ற போலித் தோற்றத்தை உருவாக்க ஓபிஎஸ் முயல்கிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறினார்..
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசாரமாக விவாதம் நடைபெற்றது…
ஓபிஎஸ் குற்றச்சாட்டு
தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை திட்டத்தை நிறுத்தியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்..
அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், கடந்த 4 ஆண்டுகளாக ஏன் தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தீர்கள்?-என்று கேள்வி எழுப்பினார்…
ஓபிஎஸ் பதில்
தாலிக்கு தங்கம் திட்டத்தை அதிமுக அரசு நிறுத்திவைக்கவில்லை;
ஒப்பந்தபுள்ளி கோருவதில் காலதாமதமானதால், திட்டத்தை 4 ஆண்டுகளாக செயல்படுத்த முடியவில்லை என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
“ஒப்பந்தபுள்ளிக்கு 4 ஆண்டுகளா? அப்படி என்ன ஒப்பந்தப்புள்ளி அது?”- என அமைச்சர் துரைமுருகன் மீண்டும் கொக்கி போட்டார்..
முதல்வர் சராமாரி கேள்வி
ஓபிஎஸ் கேள்விக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் சூடாக பதிலளித்தார்..அதன் விவரம்:
அரசியல் காழ்புணர்ச்சியால் திட்டங்களை முடக்கியது அதிமுகதான்.
புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்?
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பாழ் படுத்தியது யார்?
ராணி மேரி கல்லூரியை அப்புறப்படுத்த முயன்றது யார்?
உழவர் சந்தைகளை மூடியது யார்?
உடன்குடி மின் திட்டத்தை நிறுத்தியது யார் ?
பாடப்புத்தகத்தில் கருணாநிதி பெயரை ஸ்டிக்கர் ஒட்டியது யார்?,
இதை சொல்வதால் பழிவாங்குகிறோம் என்பதில்லை, நல்ல திட்டங்களை தொடருவதுதான் திமுக ஆட்சி என்று
ஓபிஎஸ்ஸை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சராமாரியாக கேள்விகளை முன் வைத்தார்..