நடப்பு கல்வி ஆண்டிற்கான பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் முறையே வரும் மே 6 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தொடங்கவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , சென்னை தலைமைச் செயலகத்தில் இன்றுபொதுத்தேர்வுகளுக்கான பட்டியலை வெளியிட்டார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 6-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மே 5 ம் தேதி முதல் மே 28 -ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மே 9 ம் தேதி முதல் மே 31 -ஆம் தேதி வரை நடைபெறும்
10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதியும் தொடங்கும் என்றும் ஜூன் 23ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் ஜூலை 7ம் தேதி 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
ஜூன் 17ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை இன்னும் 1 மணி நேரத்தில் tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படவுள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுதேர்வுகளை 9 லட்சம் மாணவ, மாணவியர்களும், பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகளை 8 லட்சத்து 36 ஆயிரம் பேரும் எழுதவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
பொதுத்தேர்வு பட்டியல்….
EXAM-TIME-TABLE-25.02.2022