Fri. Nov 22nd, 2024

தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு 11 வகையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு 12 நோய் தாக்குதல் இல்லாமல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்தும் தமிழகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்தும் போலியா இல்லாத நிலை ஏற்பட்டது.
இதே நிலையை அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நுடிக்கும் வகையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் கால இடைவெளியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டில் 27 வது போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பச்சிளம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகளை வழங்கி, பரிசுப் பொருட்களையும் வழங்கினார்.

https://twitter.com/mkstalin/status/1497808654652743684?s=20&t=YNU_xPkDVu27OHfaD_iezw