நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்றது. சென்னை உள்பட மாநிலம் முழுவதும் மக்களிடம் அதிக ஆர்வம் இல்லாததால் காலை முதலே வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்றது. மாலை 3 மணியளவில் நிலவரப்படி மாநிலம் முழுவதும் 47.18 சதவீதம் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக 60 சதவீதத்திற்கு மேல் வாக்கு சதவீதம் உயர்ந்தது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகவும் குறைந்தளவாகவே 31.58 சதவீதமாகவும், அதிகபட்சமாக கரூர் மாநகராட்சியில் 60.28 சதவீதமாகவும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாலை 5 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் அடுத்த ஒரு மணிநேரம், அதாவது 6 மணிவரை கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்களிக்கும் வகையில் பிரத்யேக அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து, 6 மணிக்கு வாக்குப்பதிவை நிறைவு செய்த மாநில தேர்தல் ஆணையம், வாக்குகள் பதிவான எந்திரங்களுக்கு உடனடியாக சீல் வைக்கும் பணிகள் நடைபெற்றன.
21 மாநகராட்சி, 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
வரும் 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வாக்குகள் பதிவான எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பதிவான வாக்குகள் அதிகாரப்பூர்வமாக இன்னும் ஒரு சில மணிநேரத்தில் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளனர்.