திமுக அமமுக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ் ஆர் கே அப்பு தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்
அமைச்சர் துரைமுருகனும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் அவர்களும் பேட்டை ரவுடியாக செயல்படுவதாக அதிமுக மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு கூறினார்
புதிய தியேட்டருக்கு பார்க்கிங் வசதி அடிப்படை வசதி இல்லை என விளக்கம் கேட்ட அமைச்சர் துரைமுருகன் பல லட்சங்களை பெற்றுக்கொண்டு புதிய தியேட்டர் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகனின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்
வேலூர் மாவட்டம் காட்பாடி அதிமுக மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் திமுக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்த தொண்டர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாகவும் இப்போது இருக்கின்ற திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை எனவும்
காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆதிக்கமும் அவருடைய மகன் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அவர்களின் ஆதிக்கம் அதிகாரித்து விட்டதாகவும்
அராஜக போக்கில் தான் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவருடைய மகன் கதிர் ஆனந்த் செயல்பட்டு வருவதாகவும் திமுக உறுப்பினர்களே பல்வேறு கஷ்டங்களை அனுபவிப்பதாகவும்,
கடந்த 10 நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் துரைமுருகன் புதிதாக திறக்கப்படவுள்ள ஐநாக்ஸ் தியேட்டருக்கு சாலை வசதி பார்க்கிங் வசதி இல்லை எனவும் இந்த காட்பாடி தொகுதியில் எது நடந்தாலும் என்னுடைய அனுமதியில் தான் நடைபெற வேண்டும் எனக்கூறி அருகே இருந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் தியேட்டருக்கு அனுமதி வழங்கியது குறித்து விளக்கம் கொடுக்க வேண்டும் எனக் கூறிய நிலையில்
இன்று அமைச்சர் துரைமுருகனின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் புதிய தியேட்டரை ரிப்பன் வேட்டி தொடங்கி வைத்துள்ளார்
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது தியேட்டருக்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் எனக் கூறிய நிலையில் இன்று அவரது மகன் கதிர் ஆனந்த் தியேட்டர் திறப்பு விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு திறந்து வைத்ததாகவும் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு கூறினார்
அமைச்சர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் பேட்டை ரவுடி போல் செயல்படுவதாகவும் அவரும் அவரது மகனும் அராஜக போக்கில் ஈடுபடுவதாகவும் திமுகவை சேர்ந்த கட்சி நிர்வாகிகளே புலம்புவதாகவும் கூறினார்
அதிமுக மாவட்ட கலை குழு செயலாளர் வெங்கடேசன் ஏற்பாட்டில் பகுதி செயலாளர் பேரவை ரவி முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே தலைமையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்