Sat. Nov 23rd, 2024

வருமானத்திற்கு அதிகமாக 11 கோடியே 32 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக வழக்குப்பதிவு….

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் என 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து தற்போது சோதனையானது நடைபெறுகிறது. கே.பி.அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

தெலங்கானா மாநிலத்திலும் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களில் இதுவரை 5 பேரின் இல்லம், அலுவலகம், உறவினர்கள் வீடுகள், பினாமிகளுக்கு சொத்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் முதன்முதலில் சோதனை நடைபெற்றது. அடுத்தடுத்து கரூர் விஜயபாஸ்கர், வேலூர் கே.சி.வீரமணி, புதுக்கோட்டை டாக்டர் விஜயபாஸ்கர், நாமக்கல் பி.தங்கமணி ஆகியோர் இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இவர்களை உள்ளடக்கிய அவரவர் வாரிசுகள், உறவினர்கள் உள்ளிட்டவர்கள் மீதும் சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது நினைவுக்கூரத்தக்கது.

கே.பி.அன்பழகனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள சொத்து குவிப்பு வழக்கின் முதல் தகவல் அறிக்கை…..

FIR-KG-1-details