Fri. Nov 22nd, 2024

2022 ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.. தமிழக அரசின் நடப்பாண்டிற்கான கொள்கை திட்டங்களை அவர் அறிவித்தார்.. அதன் விவரம் இதோ:

கொரோனா 2 வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகள்.

முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருவதால் தடுப்பூசி செலுத்தும் பணி அதிகரித்துள்ளது.

எங்கும் தமிழ் ; எதிலும் தமிழ் திட்டம்’ மூலம் தமிழை எல்லா இடங்களிலும் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இந்த அரசு உறுதியாக உள்ளது.

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படும்.

‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டுகள்.

முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை தேக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும்.

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ மூலம் தரமான கல்வியை எல்லா குழந்தைகளுக்கும் தர தமிழக அரசு முனைந்திருக்கிறது.

தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையையே தமிழ்நாடு அரசு பின்பற்றும்.

ஒமிக்ரான் பரிசோதனை நடத்தும் ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழ்நாட்டில்தான்.

இலங்கை தமிழர் நலனுக்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இலங்கை தமிழரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இலங்கை சிறையில் உள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உயர்கல்வியில் தரமான பாடத்திட்டத்தை சேர்த்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

விவசாயிகளின் வளர்ச்சிக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது; வரலாறு காணாத அளவுக்கு இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

“ஜனவரி 12ம் தேதி உலகத்தமிழ் நாளாக கொண்டாடப்படும்”

உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அதிகாரங்களை வழங்கி ஜனநாயகத்தை காப்பதில் தமிழக அரசு உறுதிபட உள்ளது.

மிக விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவப்புரம், நூலகங்கள் மேம்படுத்தப்படும்.

500 கோடி ரூபாயில் சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்தப்படும்.

10 வருடத்தில் தமிழ்நாடு குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.

தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில அரசின் பாடலாக அறிவித்து அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிலையங்களில் பாடப்படுகிறது; தனியார் நிகழ்ச்சிகளிலும் பாடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உயர்க்கல்வி பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படும்.

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும்..

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.

மழை, வெள்ள பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.6230 கோடி நிதி மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 25,345 அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும்.

நுழைவுத் தேர்வுகள் கிராம மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துகிறது.

நீட் போன்ற நுழைவு தேர்வுகள் உயர்கல்விக்கு தேவை இல்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது.

நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது..

150 ஏக்கர் பரப்பளவில் ஒரகடத்தில் மருத்துவ பூங்கா.

தூத்துக்குடியில் 1,100 ஏக்கரில் ஃபர்னிச்சர் பூங்காவை முதல்வர் தொடங்கி வைப்பார்.

இதன் மூலம் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இந்தியா முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது.

தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசின் இலவச பேருந்துகளில் கடந்த 4 மாதங்களில் 61% அளவிற்கு மகளிர் பயணம் செய்துள்ளனர்.

அரசின் இலவச பேருந்துகளில் கடந்த 4 மாதங்களில் 61% அளவிற்கு மகளிர் பயணம் செய்துள்ளனர்.

இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்..