Fri. Nov 22nd, 2024

பிப்ரவரி 14 பிரதமர் மோடி துவக்கி வைத்த மற்றும் அடிக்கல் நாட்டிய திட்டங்களின் முழு விவரம் இதோ…

ரூ. 3,770 கோடி மெட்ரோ சேவை துவக்கம்

3,770 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்க திட்டம் துவக்கி வைப்பட்டது. வண்ணாரப்பேட்டை முதல், விம்கோ நகர் வரை, 9.05 கி.மீ., துாரத்துக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம், பிப்ரவரி 14 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால், விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரை, மெட்ரோ ரயிலில் செல்ல முடியும்

சரக்கு போக்குவரத்து துவக்கம்

சென்னை கடற்கரை முதல் அத்திப்பட்டு வரை, 22.1 கி.மீ., வரையிலான ரயில் பாதை, 293.40 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாதையால், சென்னை துறைமுகம் மற்றும் எண்ணுார் காமராஜர் துறைமுகம் இடையே சரக்கு போக்குவரத்து எளிதாகும்

மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை

விழுப்புரத்தில் இருந்து, கடலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர்; விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை, திருவாரூர் வரையிலான ரயில் பாதை, 423 கோடி ரூபாய் செலவில் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இந்த தடத்தில், போக்குவரத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

ரூ. 2640 கோடி மதிப்பில் கால்வாய் விரிவாக்கம்..

காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணையில் இருந்து துவங்கும் கல்லணை கால்வாயை, 2,640 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கும் திட்டத்துக்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார். இந்த திட்டம் முடிவடைந்தால், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் விவசாயம் மேம்படும்

ஆராய்ச்சி மையம்

சென்னை அருகேயுள்ள தையூரில், 2 லட்சம் சதுர அடியில் அமைய உள்ள, சென்னை ஐ.ஐ.டி.,யின் டிஸ்கவரி ஆராய்ச்சி மையத்தின் பணிகளுக்கும், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.