கோவையில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்களளை நேரில் சந்தித்து அமைச்சர்கள் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்..
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மகேஷ் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும்; பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவி எண் உள்ளது; எந்த பிரச்னையாக இருந்தாலும் அதில் தொடர்பு கொள்ளலாம்.
ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனது சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல வலியை தருகிறது.
24 மணி நேரத்திற்குள் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்
பள்ளி முதல்வரையும் உடனடியாக கைது செய்துள்ளோம்.
பள்ளி முதல்வரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்..
பள்ளி முதல்வர் கைது
கோவை மாணவி தற்கொலை வழக்கில் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்
கோவை 12 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் ஏற்கெனவே கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..