Fri. Nov 22nd, 2024

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் வழங்கியுள்ள பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. சட்டப்பேரவையில் சபையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். தொடர்ந்து பயிர்க்கடன் ரத்து செய்வதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

பயிர்க்கடன் ரத்து செய்ததற்கான ரசீது 10 முதல் 15 நாட்களில் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

அதள்படி, சென்னை தலைமை செயலகத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு அடையாளமாக விவசாயிகளுக்கு அவர் ரத்து ரசீதையும் வழங்கினார். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசு இயந்திரம் படு ஸ்பீடாக இயங்குகிறது.

தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்தின் போது அறிவித்தப்படி, தமிழக அரசின் உதவியை பெற 1100 சேவை எண் திட்டத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

இதன் பின்னர், காணொளி வாயிலாக கீழடி 7ம் கட்ட அகழாய்வுப் பணியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

தமிழக தொல்லியல்துறை சார்பில் 6 கட்ட அகழாய்வு பணிகள் ஏற்கெனவே முடிந்துள்ளன. இந்த நிலையில் 7ம் கட்ட அகழாய்வு பணி இன்று தொடங்கியுள்ளது.