பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாகி சசிகலா சென்னை திரும்பிய 9 ஆம் தேதியில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக, வார்த்தைப் போர் அதிகமாகிவிட்டது. சசிகலா மற்றும் தினகரன் தொடர்புப்படுத்தி இன்று கடுமையாக பேசியுள்ளார் அமைச்சர் சி.வி.சண்முகம்.
விழுபபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டி.டி.வி.தினகரனுக்கு எதிரான கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அதன் விவரம் இதோ…
அ.தி.மு.க கொடியைக் கட்டிக்கொண்டு சசிகலா தமிழகத்துக்குள் காரில் வந்த நிகழ்வில், சட்டம் நிச்சயம் தனது கடமையைச் செய்யும்.
சசிகலாவுக்கு எச்சரிக்கையாகவே ஒன்றைச் சொல்கிறேன். உங்களை தினகரனிடமிருந்து முதலில் நகாப்பாற்றிக்கொள்ளுங்கள்.
தினகரனை நம்பித்தான், இந்தக் கட்சி, ஆட்சி என எல்லாவற்றையும் சசிகலா ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.
ஆனால் ஒரு மாதத்தில் கூத்தாடி கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டி என்ற கதையாக உடைத்துவிட்டார்.
அ.தி.மு.க., ஒன்றரைக் கோடி தொண்டர்களின் உழைப்பு, ரத்தத்தில் உருவானது. இதில், சசிகலா மற்றும் அவர் குடும்பத்துக்கு இடமில்லை. எந்தக் காலத்திலும், எந்தச் சூழலிலும் சசிகலா குடும்பத்துக்கு அ.தி.மு.க அடிமையாக இருக்காது.
இவ்வாறு பொங்கினார், சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம்.
அவரின் வசைப்பாடலுக்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார் டி.டி.வி. தினகரன்..
சபாஷ்..சரியான போட்டி…