Sat. Apr 19th, 2025

தமிழ் திரையுலகில் தனித்துவமான பாடலாசிரியராக திகழ்ந்தவர் கவிஞர் பிறைசூடன். (65 வயது). இளம் கவிஞர்களுக்கு வானம்பாடியாக திகழ்ந்தவர் அவர். திரையுலக கவிஞர்கள் கொண்டாடிய பிறைசூடன் இன்று தனது வீட்டில் உறவினர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று மயக்கமடைந்து, சரிந்து விழுந்து காலமானார்.

தன் மரணம் வரை யாருக்கும் தலை வணங்காத கவிஞராக வாழ்ந்தவர், பாடல் வாய்ப்பு கேட்டு, எந்தவொரு இசையமைப்பாளரையும் அணுகாதவர் என்ற புகழுக்குரியவர்.

தமிழில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1400க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார் பிறைசூடன்.

அவரின் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரின் தன்மான உணர்வை நினைவுக்கூர்ந்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.