Sun. Apr 20th, 2025

உயர்க்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், 7.5 சதவீத இடஒதுக்கீடு பொறியியல் உள்ளிட்ட படிப்புகளிலும் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி, பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீத இடஒதுக்கீடு உடனடியக அமலுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 11 ஆயிரம் மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு 5 முறை கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

6ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படும்.

9ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்திருந்தால் சிறப்பு ஒதுக்கீடு கிடையாது.

அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவில்லை.

அரசு பள்ளியில் படித்தது குறித்து விண்ணப்பத்தில் குறிப்பிடாத மாணவர்கள் மீண்டும் தெரிவிக்கலாம் .

பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு செப்.27 ஆம் தேதி தொடங்குகிறது,

இவ்வாறு உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.