Sat. Nov 23rd, 2024

கே.சி.வீரமணிக்கு சொந்தமான கல்லூரி…

ஓசூரில் வீரமணிக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனையால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சொத்துக் குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது.

அதிமுக ஆட்சியில் வணிகவரித் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி. வீரமணி. இவர் 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

2011ஆம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு 7 கோடியாக இருந்த நிலையில் பின்னர் 90 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ 90 கோடி அளவுக்கு சொத்துகளை வாங்கி குவித்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மூக்கண்டப்பள்ளி பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் கோவையைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த சோதனையின் காரணமாக உள்ளூர் போலீசார் 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது இன்று மாலை வரை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணி இல்லத்தில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது வீட்டு முன்பு குவிந்த அதிமுக நிர்வாகிகள், வீட்டிற்குள் சென்று கே.சி.வீரமணியை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், அதற்கு போலீசார் அனுமதிமறுத்ததையடுத்து, அதிமுக.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தபோது, அவர்களுடன் அதிமுக.வினர் கைகலப்பில் ஈடுபட்டனர். அதனால், அந்த பகுதியில் சிறிதுநேரம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.