வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சௌந்தர்யா என்ற மாணவி நீட் தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செளந்தர்யா..பிளஸ்2 முடித்த இவர் நீட் தேர்வு க்கு தயாராகி வந்தார்..
தோட்டபாளையம் பள்ளியில் படித்த 12 ஆம் வகுப்பு மாணவி 510 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் இந்த நிலையில் இவர் கிங்ஸ்டன் பொறியல் கல்லூரியில் நீட் தேர்வு எழுதி இருந்தார்
நீட் தேர்வில் தான் தோல்வியடைந்து விடுவோம் என்று பெற்றோரிடம் கூறி அழுத வண்ணம் இருந்த அவர் இன்று
புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஏற்கெனவே மேட்டூர் மாணவர், அரியலூர் மாணவி என இருவர் கடந்த 3 நாட்களுக்குள் பலியான சோகமே இன்னும் அகராதி நிலையில் மேலும் ஒரு மாணவி நீட் தேர்வுக்கு பலியாகியுள்ளது தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..