அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தில் நீட் தேர்வால் உயிரிழந்த கனிமொழியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தி.மு.க சார்பில் 10 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
நீட் தேர்வை நேற்று முன்தினம் எழுதிய நிலையில், போதிய மதிப்பெண் வருமா என்ற பயத்தில் மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் காலை நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மேட்டூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். தனுஷ், கனிமொழி ஆகிய இரண்டு பேரின் மரணம் மூலம் மாணவர்களிடம் நீட் தேர்வு தொடர்பான பயம் இன்னும் நீங்கவில்லை என்பது உறுதியாகிறது. மனஉளைச்சலுனுடனேயே நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
கனிமொழி இறுதி ஊர்வலத்தில் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் உள்பட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கலந்துகொண்டனர். திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை கனிமொழியின் பெற்றோரிடம் அமைச்சர் வழங்கினார்.