Sat. Nov 23rd, 2024

டெல்லியில் மத்திய சுகாதார துறை அமைச்சரை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழக அரசின் கோரிக்கை முன் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்..

மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடனான சந்திப்பிற்கு பின் டெல்லியில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்த பேட்டி:

கேரள எல்லையை ஒட்டியுள்ள 9 மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

1.04 கோடி தடுப்பூசிகள் செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கவுள்ளது.

தமிழ்நாட்டில் 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என கோரிக்கை வைத்தோம், அதனை உரிய குழுவுடன் ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக தெரிவித்தார்.

ஆக. மாதம் தமிழகத்திற்கு 34 லட்சம் கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்திற்கான தேவைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம்

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்..