தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்தநிலையில், பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
ஒரு வகுப்பில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி.
மாணவர்களை அமர வைப்பதில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கூடுதல் வகுப்பறைகள் இல்லாவிட்டால், மீதமிருக்கும் மாணவர்களுக்கு மற்றொரு நாளில் வகுப்பு நடத்த வேண்டும்.
ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.
வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.