சட்டமன்றத்தில் இன்று கூட்டுறவு மான்ய கோரிக்கை யை தாக்கல் செய்து அமைச்சர் ஐ. பெரியசாமி உரையாற்றினார்..அப்போது அவர் கூறியதாவது :
முந்தைய அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் வழங்கியதில் ரூ.516 கோடி அளவில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்க ப் பட்டுள்ளது..
வங்கிகளில் அளிக்கப்பட்ட சிட்டா அடங்கலில் குறிப்பிடப்பட்ட சாகுபடி நிலங்களின் பரப்பளவை பன்மடங்கு அதிகரித்துக்காட்டி முறைகேடாக கூடுதல் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருந்தாலும் கூட சேலம், நாமக்கலில் மட்டும் ரூ.503 கோடி முறைகேடு நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது..
சாகுபடி க்கான பரப்பளவு மற்றும் பயிர் நடவு செய்யும் அளவை கணக்கீட்டு பயிர் கடன் வழங்கப்படும்..ஆனால் இதை கணக்கில் எடுக்காமல் அதிக அளவில் கடனை உயர்த்தி கொடுத்து இருக்கிறார்கள்.
குறிப்பாக அதிமுக முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் சொந்த ஊரில் கூட மோசடி நடைபெற்று இருக்கிறது. அவரின் சொந்த ஊரான கோச்சடையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கடன் வழங்கப்பட்டு உள்ளது.
அதேபோல் சேலம் மாவட்டத்தில் 12 கூட்டுறவு வேளாண்மை வங்கியில் மொத்தம் 4.96 கோடி ரூபாய் மட்டுமே கடன் வழங்க வேண்டும். ஆனால் இங்கு விதியை மீறி மொத்தம் 2,698 பேருக்கு 16.70 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
பிற்காலத்தில் பயிர் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படும் என எதிர்பார்த்து கூடுதல் கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த தகவல்கள் முறையாக கணினியில் பதிவு செய்யப்படாமல் விதி மீறல் செய்யப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது கூட்டுறவு வங்கிகளில் கணினி பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது..ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் இருக்கும் கணினிகளை சரியாக பயன்படுத்தாமல் சாம்பிராணி போட்டுள்ளனர்.
கடன் வழங்குவதிலும், தள்ளுபடி செய்வதிலும் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த முறைகேடுகள் குறித்து விசாரித்து வருகிறோம். தவறு செய்திகளின் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் விசாரிக்கப்படும்
இவ்வாறு அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்..