Wed. Nov 27th, 2024
https://twitter.com/mkstalin/status/1426461278504062977?s=20

நிதி நிலை அறிக்கை தாக்கலுக்கான சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், 2021 22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து, பல்வேறு சிறப்பம்சங்களை அறிவித்தார். தொடர்ந்து, 2 ஆம் நாளான இன்று சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கான நிதி நிலை அறிக்கையை. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு சிறப்பம்சங்களை அறிவித்தார்.

தொடர்ந்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிறது; முதல் ஒரு மாத காலம் ஆம்புலன்ஸ் சத்தம்தான் கேட்டது, அந்த சத்தம் நிம்மதியாக இருக்கவிடவில்லை, லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியதும், அரவணைப்பாக இருந்ததும்தான் பெரிய சாதனையாக கருதுகிறேன்.

100 நாள் ஆட்சியில் சிறந்த பெயரை பெற்றுள்ளோம்; அதனை காலமெல்லாம் காப்பாற்ற வேண்டும்; திமுக ஆட்சி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் இழந்த பெருமையை மீட்டெடுக்க எங்களால் முடியும் என்ற நம்பிக்கை தரும் நாட்களாக இந்த 100 நாட்கள் அமைந்துள்ளது.

வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிவிட்டேன் என ஏமாற்ற தயாரில்லை; வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம், நிறைவேற்றுவோம்.

வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்து வரும் நாட்களில் 2 மடங்காக உழைப்போம்-

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை:

சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகளுடன் நிறைவடைந்தவுடன், திமுக ஆட்சியின் 100 நாட்கள் நிறைவை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர். மு.கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.