Sun. Nov 24th, 2024

தமிழக அரசின் நிதி நிலை தாக்கலுக்காக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் 2021 22 ஆம்ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கையை, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாபு இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்ததார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் முதல்முறையாக காகிதம் இல்லாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. தொடர்ந்து ஒவ்வொரு துறை வாரியாக அந்தந்த அமைச்சர்கள் துணை மானிய கோரிக்கைகளை தாக்கல் செய்வார்கள். காகிதம் இல்லாத பட்ஜெட்டை வாசிப்பதற்காக, அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கையடக்க கணினி வழங்கப்படவுள்ளது. அதனை இயக்குவது தொடர்பான பயிற்சி அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனார்.

கொரோனோ தொற்றின் காரணமாக, சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை ரீதியாக பதில்கள் வருவதற்கு தாமதம் ஆகின்றன. இதனால், கேள்விநேரத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவை கூடும் நாளில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு சட்டப்பேரவைத் தலைவர் கூறினார்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் முதல் மானியக் கோரிக்கைகள் வரை பேரவை கூடும் நாள்கள் விவரம்