Wed. May 7th, 2025

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழக நலன் சார்ந்த கோரிக்கை களை வலியுறுத்தி னார்..குறிப்பாக, எழுவர் விடுதலை, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களில் பிரத்தியேக கவனம் செலுத்த வேண்டும் என்று ம் முதல்வர் கேட்டு கொண்டார்…

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் மு.க ஸ்டாலின் முதல் முறையாக குடியரசுத் தலைவரை இன்று சந்தித்தார்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். முதல்வரக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அவர் டெல்லிக்கு சென்றபோது பிரதமர் மோடியை மட்டுமே சந்தித்தார். அப்போது கொரோனா பரவல் தீவிரமாக இருந்ததால், குடியரசுத் தலைவர் யாரையும் சந்திக்க முன்வரவில்லை. தற்போது கொரோனாவின் தீவிரம் குறைந்துள்ளதால், குடியரசுத் தலைவரை அவர் சந்தித்திருக்கிறார். இந்நிலையில் இன்று 12.11 மணியளவில் அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருந்தாலும்,

இந்த சந்திப்பின்போது எழுவர் விடுதலை, நீட் தேர்வு, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடக அரசின் இந்த புதிய அணை திட்டத்திற்கு தமிழ்நாட்டு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து கட்சி தலைவர்கள் அடங்கிய குழு டெல்லி புறப்பட்டு சென்றது. இந்த குழு தமிழக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட்டது. இந்நிலையில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக டெல்லி சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.