Sat. Nov 23rd, 2024

அந்தமான் ரியல் கிரியேஷன்ஸ் வழங்கும் ‘வெங்காய வெடி’ எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கப்படவுள்ளது.

இயக்குனர் ஆர். வி. உதயகுமார்..

இத்திரைப்படத்தின் இயக்குனர் செந்தில்நாதன், இயக்குனர் ஆர். வி உதயகுமார், வையாபுரி, ரமேஷ்கண்ணா, ரம்யா, கௌதமி, சாப்ளின் பாலு, கிரேன் மனோகர், கிங் காங், வெங்கல்ராவ், பிர்லா போஸ், அன்புமணி, செல்வரகு, ஜெகநாதன், பஞ்சர் பாண்டி, மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் .

அனு கிருஷ்ணா


ஸ்ரீகண்ட திரைப்படத்தின் கதாநாயகன் கார்த்திக் ஸ்ரீராம் இத்திரைப்படத்தின் இரண்டு கதாநாயகர்களின் ஒருவராக நடிக்கிறார். கதாநாயகிகளாக இளமி ,ஸ்ரீ ராமானுஜம் ,அலைபேசி திரைப்படங்களில் நடித்த அனு கிருஷ்ணா மற்றும் ரூம் மேட் ,பாபிலோன் திரைப்படத்தில் நடித்த காதம்பரி நடிக்கிறார்கள்.

கதைச்சுருக்கம் :

மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த நாயகன் நான்கு ஆண்டுகளாக மிகப் பெரிய நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக பணியாற்றுகிறார். அவன் வாழ்வில் அனைத்தும் நினைத்தபடியே சந்தோஷமாக இருக்கிறது .ஆனால் வாழ்வின் இலட்சியமே காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்ற அவனுக்கு நினைத்தபடி காதலி அமையவில்லை. 

தனது கனவு தேவதையை தேடிக்கொண்டிருக்கிறார். அவன் தந்தை அவனுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கிறார்கள். நடந்த திருமணத்தில் அவனுக்கு ஈடுபாடில்லை. எனவே திருமணம் முடிந்த மூன்றாவது நாளே சென்னை திரும்புகிறார். நாயகனை  தேடி அவனது மனைவியும் சென்னை வருகிறார் . நாயகனை  சந்திக்கும் நாயகி அவரிடம் ஒரு யோசனை தெரிவிக்கிறாள்.

விபரீத யோசனையால் நடந்த பிரச்சனைகளை நாயகன் எவ்வாறு எதிர்கொள்கிறான் ? என்பது கதையின் கரு.
இத்திரைப்படம் சென்னை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. பாடல் காட்சிகள் அனைத்தும் அந்தமான் தீவுகளில் படமாக்கப்படும் .

கவிஞர் பிறைசூடன்

இத்திரைப்படத்தை C .K பிரியன் இசையமைக்க ,கவிஞர் பிறைசூடன், சினேகன், தமிழ் குமரன், ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள். மேலும் இத்திரைப்படத்தின் பாடகி அனுராதா ஸ்ரீராம் ,சைந்தவி ,பாடகர் பிரசன்னா, தீபா மரியம் ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர் .

தொழில்நுட்ப கலைஞர்கள் 


எழுத்து இயக்கம் – D .S  பிரகாஷ் 
ஒளிப்பதிவு- P. கல்யாண சுந்தரம் 
வசனம் – R .வீரமணி 
இசை –  C .K பிரியன்
படத்தொகுப்பு- B .S  வாசு 
நடன இயக்குனர் -கம்பு முருகன் 
சண்டைப்பயிற்சி- பவர் பாஸ்ட் 
மக்கள் தொடர்பு – செல்வரகு
தயாரிப்பு – K .S  பாரதிராஜா, P  அருள்ராஜ் ,வெற்றி .R