Sun. Nov 24th, 2024

பேரறிஞர் அண்ணாவின் புகழை 50 ஆண்டுகளுக்குப் பிறகு இளம்தலைமுறையினருக்கு நினைவுப்படுத்தி, அவரின் கொள்கையை மடை மாற்றியுள்ளதன் மூலம் இன்றைய தேதியில் சர்வதேச அளவில் மாவெரும் புகழ் பெற்றுள்ளார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

காஞசிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் உள்ள ஹோண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கப்படும் கார்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 99 லட்சத்து 99 ஆயிரத்து 999 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு கோடியை கார் விற்பனையை தொட்டுள்ள நிலையில், ஒரு கோடியாவது கார் விற்பனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இதற்கான அந்த நிறுவன வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், 1996 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞர் மு.க. கருணாநிதி ஹோண்டாய் நிறுவனத்தை முதன்முதலில் துவக்கி வைத்ததை நினைவுக் கூர்ந்தார்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றினார்.

அதேபோல் நான் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை தொழில்வளர்ச்சியில் முதல் மாநிலமாக மாற்றுவேன். இதற்கு ஹூண்டாய் நிறுவனம் போலவே அனைத்து நிறுவனங்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

இந்நிறுவனம் தமிழகத்தில் அதிக முதலீடு செய்த நிறுவனம் மட்டுமல்ல. கூகுள் வரைபடத்தில் ஸ்ரீபெரும்புதூரை அடையாளம் காட்டிய நிறுவனம்.

தமிழகத்தின் மீது உலக நாடுகளின் கவனம் குவியும் வகையில் திட்டங்களை வகுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

தொழில்துறையில் அதிக முதலீடுகளை பெறும் வகையில் அரசின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வருவேன். தொழில்துறையில்

தமிழகம் முன்னேற்றம் அடைய அரசு நடவடிக்கை எடுக்கும்

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் இல்லத்திற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு நிறுவப்பட்டுள்ள மார்பளவு அவரின் திருவுருச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்குள்ள திராவிட பேரியக்கத்தின் வரலாற்று ஆவணங்களாக அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை விளங்கும் புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்டு பழங்கால நினைவுகளில் மூழ்கிப் போனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முதல்வராக பதவியேற்றப் பிறகு முதல்முறையாக காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில், அவர் உயிரோடு வாழ்ந்த காலத்தில் அவரின் விரல் பிடித்து நடந்த நிகழ்வுகளை நினைவுக்கூர்ந்து நெகிழ்ந்துப் போனார்.

அதன் வெளிப்பாடாகதான், பேரறிஞர் அண்ணாவின் பொது வாழ்க்கை தத்துவமாக திகழும் வைர வரிகளை அங்குள்ள பதிவேட்டில் பதிவிட்டு, தானொரு திராவிட சிசு என்பதை சொல்லாமல், தமிழ் கூறும் நல்லுகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்கிறார்கள் அவருடன் உடனிருந்த திமுக முன்னணி நிர்வாகிகள்…