Sun. Nov 24th, 2024


கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க பல்வேறு சலுகைகளை அரசு செயல்படுத்தி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினத்தையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:-

பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு உதவுவதோடு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை பெருக்குகிறது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை.

புதிய தொழில் நிறுவனங்கள் துவங்குவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீட்டெடுக்கபல்வேறு சலுகைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. தொழில் நிறுவனங்கள் மீள தமிழ்நாடு அரசு உதவும்.

எத்தகைய சவால்களையும் இந்நிறுவனங்கள் எதிர்கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு திட்டங்களை உருவாக்கி முன்னோடி நடவடிக்கைகளையும் எடுக்கும்.

புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கும், எத்தகைய இடரினையும் கடந்து முன்னேறுவதற்குமான சூழல் உருவாக்கப்படும்.

தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இந்த அரசு செயல்படும். இந்த இனிய நாளில் அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.