Sun. Apr 20th, 2025

கொரோனா தொற்று தீவிரம் குறைந்தவுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது:.

மதுரவாயல் – சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் விரிவுபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுப் பணிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிரப்பப் படாத காலியிடங்கள் சிறப்பு நியமனங்கள் மூலம் நிரப்பப்படும்.

திருநங்கைகளின் வாழ்க்கையை வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தொழில் தொடங்குவதற்கும் ஏற்ற வகையில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க தொழிலதிபர்கள், நிதித்துறை வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

கோயில்களின் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துக்கள் பாதுகாக்கப்படும்.

புதிய ரேசன் அட்டை விண்ணப்பித்தால் 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

மதுரையில் ரூ70 கோடியில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும்.

தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க அரசு உறுதியாக உள்ளது.

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

பெரிய நகரங்களின் புறநகர் பகுதிகளில் துணை நகரங்கள் உருவாக்கப்படும்.

3 விவசாய சட்டங்களை ரத்து செய்ய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்- ஆளுநர் பன்வாரிலால்.