Thu. Nov 21st, 2024

பேராசிரியர். தோழர். C.K. ரவீந்திரநாத்….
கடந்த மாதம் வரை கேரள மாநிலத்தில் அமைச்சராக இருந்தவர்…

அதிலும் அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பணியாற்றி சிறப்பான செயல்பாட்டை முன்வைத்தவர்…

மாநிலத்தின் கல்வித்துறையின் முகத் தோற்றத்தையே மாற்றி அமைத்து… பொதுக்கல்வி கட்டமைப்பை வலுவாக்கி… சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்தி அனைவரது புருவங்களையும் உயரச் செய்தவர்…

இந்திய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் பங்கேற்று விட்டு இந்த முன்னாள் அமைச்சர் வீடு திரும்பும் காட்சி தான் இது…

அந்தப் பகுதியில் உள்ள பிரதேச கட்சி அலுவலகத்தில், தோழர் ரவீந்திரநாத் அமைச்சராக இருந்தபோது அவரது குழுவில் ஊழியராக பணியாற்றி கொண்டிருந்த ராமகிருஷ்ணன், அந்தப் பகுதியின் செயலாளர் தோழர். வினோதிடம், தோழர். ரவீந்திரநாத்திற்கு ஒரு சைக்கிள் வேண்டும்… அவர் அந்தப் பகுதியில் எங்காவது செல்ல வேண்டுமென்றால் ஒரு சைக்கிள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பதாகவும் கூறினார்…

உடனே, தோழர். வினோத் அவர்களால், ஒரு சைக்கிள் ஏற்பாடு செய்யப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது…

இப்போது அவர் குடியிருக்கும் பகுதியில் எங்காவது செல்ல வேண்டுமென்றால் இந்த சைக்கிளில் தான் சென்று வருகிறார்… எப்போதுமே சைக்கிள் அவரது பிரியத்துக்குரிய அருமை வாகனம்…

விஷயம் அதுவல்ல… கடந்த பத்து வருடங்களாக சட்டமன்ற உறுப்பினர்… கடந்த ஐந்து வருடங்களாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டு… பின்னர் அந்தப் பொறுப்பு காலம் முடிந்து பொறுப்புகளில் இருந்து விடுபட்ட உடனே இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவது என்பது, இந்த மனிதருக்கு எந்த ஒரு கஷ்டமான விஷயமாகவும் இல்லாமல் போனதுதான், இவரை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகின்ற ஆச்சரியமான அனுபவம்…

மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்பட வேண்டிய நாடாளுமன்றத்தை, பன்றிகள் புரளும் கொட்டடியாக மற்றும் ‘தொழில்முறை’ அரசியல் வாதிகளின் மத்தியில், மக்கள் மன்றத்தை மக்களுக்காகவும் அரசியலை மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் விதத்தில் ஒரு சமூக சேவையாகவும் ஏற்று, இது போன்று மக்கள் பணியாற்ற கம்யூனிஸ்டுகளால் மட்டுமே முடியும்…

அத்தகைய முறையில் பணியாற்றும் போது தான்…அணிந்திருக்கும் ஆடையை மாற்றி மாற்றுடை அணியும் லாவகத்தில்… அதிகாரத்திலிருந்தும் பொறுப்புகளில் இருந்தும் விடுபட்ட உடன் சாதாரண மக்கள் ஊழியராக வெகு இயல்பாக மாற ஒருவரால் முடியும்…

இதை செவ்வனே செய்து சமூகத்திற்கு முன் உதாரணமாகத் திகழ்வதில் கம்யூனிஸ்டுகள் எப்போதுமே முன்னணியில் நிற்கின்றனர்…