Sat. Nov 23rd, 2024

அதிமுக எம்.எல்.ஏ. க்கள் கூட்டத்தில், அக்கட்சியின் சட்டமன்றத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் சென்னை அதிமுக தலைமைக் கழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக, அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆஜராகிவிடுவார்கள். இதெல்லாம் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அந்த ஒழுக்கம் அதிமுக.வில் இருந்தது. அவர் மறைந்ததையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் ஆதரவில்தான் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர். அதனால், அவரவர் இஷ்டத்திற்கு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். நண்பகல் 12 மணியளவில் கூட 25 எம்.எல்.ஏ.க்கள்தான் தலைமைக் கழகத்திற்கு வந்திருந்தனர். மற்ற எம்.எல்.ஏ.க்கள் மிகுந்த அலட்சியமாகதான் அதிமுக அலுவலகத்திற்கு வந்தனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் வந்தனர். ஏற்கெனவே பல கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட நான்கு பதவிகளுக்கு எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

.