Sat. Nov 23rd, 2024

ஊரடங்கு காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள், கொண்டாட்டத்திற்கான நேரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தினால் நிலவும் ஊரடங்கு நேரத்தில் விலங்குகளுக்கு உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இதை விசாரித்த தலைமை நீதிபதி, ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளை மக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது.

இயல்பு நிலை திரும்பியது போல் காட்சி அளிக்கிறது.

இது கொண்டாட்டத்திற்கான நேரமில்லை.

ஊரடங்கு காலத்தில் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க வேண்டும்.

கொரோனா முதல் அலையில் காவல்துறை கடுமையாக நடந்தது தற்போது கனிவுடன் நடப்பதை சாதகமாக எடுத்துக் கொண்டுள்ளனர்.

ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

விலக்கிக் கொள்ளப்படவில்லைஎன்று கூறியுள்ளார்.

மேலும் ஊரடங்கில் மக்கள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.