Sun. Apr 20th, 2025

கண்ணியமிகு காயிதே மில்லத் ரஹ் 126 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தலைவர், இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க எல்லா தகுதியும் எம் தாய் மொழி தமிழ்மொழிக்கு உள்ளது என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய கண்ணியமிகு தலைவர் காயிதே மில்லத்திந் 126 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜித்தில் உள்ள அவரது நினைவிடத்தில்தமிழ் நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை சாத்தி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் கலந்துகொண்டு மரியாதை செய்தனர்.

தேசிய கவுன்சில் உறுப்பினர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி பிரார்த்தனை செய்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாநில பொதுச் செயலாளர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர்., மாநில முதன்மை துணை தலைவர் எம்.அப்துல் ரஹ்மான்., மாநில துணை தலைவர் கே.நவாஸ் கனி M.P., தேசிய செயலாளர் எச். அப்துல் பாசித்., மாநில செயலாளர் கே. எம். நிஜாமுதீன் மற்றும் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, தொழிலாளர் யூனியன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.