Sun. Nov 24th, 2024

Pulwama hero’s widow completes mission to become an army officer

ஆங்கில நாளிதழ்களின் செய்திப்பிரிவில் அறிவார்ந்த ஊடகவியலாளர்கள், ஆழ்ந்த ஞானம் படைத்தவர்கள்தான் முக்கிய பொறுப்பில் இருப்பார்கள். வரலாற்று நிகழ்வுகள், தியாக வாழ்க்கை போன்றவற்றை செய்தியாக்கும் போது பயன்படுத்தும் வார்த்தைகளிலேயே, அந்த நிகழ்வுகளுக்கு எவ்வளவு முக்கியத்தும் கொடுக்கிறோம், அதேபோன்ற உணர்வுகளை மனதில் உள்வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதாக அமையும்.

அந்தவகையில், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ மேஜர் விபூதி சங்கர் தவுந்தியாலின் இறுதிச் சடங்கின் போது அவரது இளம்வயது மனைவி நிகிதா கௌல், தேசப் பக்தியுடன் விடை கொடுத்த நிகழ்வை, யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

திருமணம் ஆன 9 மாதங்களுக்குள்ளாகவே தனது அன்புக் கணவரை இழந்த நிகிதா, அழுது புரண்டு கண்ணீர் வடிக்காமல், மிகுந்த மனவுறுதியோடு கம்பீரமாக நின்று தனது வாழ்க்கை துணைக்கு விறைப்பாக சல்யூட் அடித்ததுடன், விபூதி சங்கருக்கு முத்தம் கொடுத்தும் வழியனுப்பி வைத்தார்.

இளம்வயதில் வாழ்க்கை துணையை இழந்த சோகத்தில் இருந்து விரைவாக மீண்ட அவர், உயிருக்கு உயிராக நேசித்த விபூதி அமைத்துக் கொண்ட லட்சியப் பாதையிலேயே பயணிக்க தொடங்கினார் நிகிதா. அதற்காக பன்னாட்டு நிறுவனத்தில் தான் பார்த்து வந்த வேலையில் இருந்து விலகி, ராணுவ படையில் சேருவதற்கான தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்றார் நிகிதா.

ராணுவத்தில் அதிகாரப்பூர்வமாக சேர்வதற்காக, சென்னையில் பயிற்சி பெற்ற நிகிதா, சலனமில்லாமலும், மனவுறுதியுடனும் பயிற்சியை முடித்து, ராணுவ அதிகாரிகயாக தேர்வு பெற்று, ராணுவ படையில் தன்னை இணைத்துக் கொண்டார். அதற்கான விழா, நேற்று சென்னையில் நடைபெற்றது.

தீரமிக்க ராணுவ மேஜரின் மனைவி நிகிதாவை, விதவை என்ற அடைமொழியோடு அழைப்பதை தவிர்த்து, வாழ்க்கை துணை (better half ) என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தால், ராணுவ அதிகாரி நிகிதாவுக்கு அதைவிட சிறப்பு, பெருமையை ஆங்கில நாளிதழ்கள் செலுத்தியிருக்க முடியாது…