காஞ்சிபுரம் மாவட்டம் ஒரக்கடம் பகுதியில் இருக்கக்கூடிய தனியார் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் பேசினார். அதன் விவரம் இதோ…
தீவிர ஊரடங்கால் பலன் கிடைக்க தொடங்கி உள்ளது.
ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
போதுமான படுக்கைகள் மருத்துவமனையில் தயாராக உள்ளது.
இன்னும் 2-3 நாட்களில் முழுமையான பலன் தெரியும் ..
முழு ஊரடங்கு முதலில் ஒரு வாரத்திற்கு செயல்படுத்தலாம் எனக் கருத்துக் கூறப்பட்டது.
தற்போதுள்ள முழு ஊரடங்கால் முழு திருப்தி இன்னும் கிடைக்கவில்லை.
சூழலை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்:
இவ்வாறு முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்…