Fri. Nov 22nd, 2024

சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரேனோ ஊரடங்கு காலத்தில், சுராஜ்புர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மருந்து வாங்குவதற்காக சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஆட்சியர் ரண்பீர் சர்மா, காரை நிறுத்தி இறங்கி அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அந்த இளைஞர் தான் மருந்து வாங்குவதற்காக வந்ததாக கூறி மருந்துச் சீட்டை காண்பிக்கிறார். அதை பொருட்படுத்தாத ரண்பீர் சர்மா, இளைஞரின் கையில் இருந்த செல்போனை திடீரென்று பறித்து சாலையில் வீசி உடைக்கிறார். அப்போதும் அவரின் கோபம் தணியாததால், அந்த இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அடித்துவிட்டு, தன் பாதுகாப்பிற்காக உடன் வந்த ரோந்து போலீசாரை அழைத்து அந்த இளைஞரை அடித்து உதைக்க வேண்டும் என ஆவேசம் குறையாமல் சத்தம் போடுகிறார்.

ஆட்சியரின் உத்தரவுக்குப் பணிந்து போலீசாரும் அந்த இளைஞரை லத்தியால் அடித்து வெளுக்கின்றனர். ஆட்சியரும், போலீசாரும் இணைந்து நடத்திய காட்டுமிராண்டிதனமான அராஜகத்தை அங்குள்ள ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிடுகிறார். சில நொடிகளில் இந்த வீடியோ வைரலாகிவிட, அதனைப் பார்த்து சத்தீஸ்கர் மாநில முதல்வர் பாஹல், ஆட்சியர் ரண்பீர் சர்மாவை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், இதுபோன்ற அராஜக செயல், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறுவதை பொருத்துக் கொள்ள முடியாது என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

ஆனால், பணியிடை மட்டும் போது, ரண்பீர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

https://twitter.com/AdityaRajKaul/status/1396144675325546496?s=20