தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாயத்தில் இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி), காந்தி (நாகர்கோவில்) சரஸ்வதி (மொடக்குறிச்சி) ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலிடப் பார்வையாளர்களாக மத்திய இணையமைச்சர் கிரண்ரெட்டி,தமிழக பாஜக பொறுப்பாளர் ரவி, தமிழக பாஜக தலைவர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நயினார் நாகேந்திரனை தவிர மற்ற மூவருக்கும் சட்டமன்ற அனுபவம் இல்லததால், நயினார் நாகேந்திரனை பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக பாஜக மேலிடம் அறிவித்துள்ளது.
பாஜக.வில் நீண்ட வருடங்களாக பணியாற்றி வரும் வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி ஆகிய இருவரில் ஒருவர்தான், பாஜக சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அக்கட்சி நிர்வாகிகள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்தநிலையில், அதிமுக.வில் இருந்து அண்மையில் பாஜக.வில் இணைந்த நயினார் நாகேந்திரனுக்கு சட்டமன்றக் குழுத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது, அக்கட்சியின் முன்னணி தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.