Sat. Nov 23rd, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையின் முதற்கூட்டம் இன்று பிற்பகலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கொரோனோ தொற்று தடுப்புப் பணிகள், மாநிலம் தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள வசதிகள், மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொரோனோ தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அனைத்து அமைச்சர்களும் அவரவர் துறைகளுடன் மற்ற துறைகளையும் இணைத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

முதல்முறையாக அமைச்சரவைக் கூட்டம் முடிந்தவுடன், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கபட்ட முடிவுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனத டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அம்சங்கள் இதோ….