Tue. May 14th, 2024

சேலத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. சேலம் தெற்கு, வீரபாண்டி, ஏற்காடு ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்த வாக்கு எந்திரங்கள், அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்வி நிறுவனமான கணேஷ் கல்லூரியில் பாதுகாப்பபாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை நாளான இன்று அதிகாலையிலேயே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், அரசியல் கட்சி முகவர்கள் உள்ளிட்ட அனைவரையும் தீவிர சோதனைக்குப் பிறகே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதித்தனர். வாக்கு எந்திரங்களில் பொறுத்தப்பட்டுள்ள முத்திரைகளை ( சீல்) அரசியல் கட்சி முகவர்களிடம் அரசு அதிகாரிகள் காட்டினார்கள். அவர்களின் சம்மத்திற்குப் பிறகே வாக்கு எந்திரத்தில் இருந்த முத்திரை அகற்றப்பட்டு, முதற்கட்ட வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், அரசியல் முகவர்கள் அனைவருக்கும் 48 மணிநேரத்திற்கு முன்பாக கொரோனோ தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர்களுக்கு தொற்று இல்லை என்பதை உறுதி செய்த சான்றிதழ்களுடன் இன்றைய பணிக்கு வந்துள்ளனர். அவர்களுடைய மருத்துவப் பரிசோதனை சான்றிதழ்களை, வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகே மையத்திற்குள் அனுமதித்தனர்.