தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பிரதமர் மோடி, இரண்டு முறை தேர்தல் பிரசாரத்திற்கு வந்து சென்றிருக்கிறார். உள்துறை அமைச்சர் மூன்று, அல்லது நான்காவது முறையாக தமிழகத்திற்கு பரப்புரைக்கு வருகிறார். அதுபோலவே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இரண்டாவது முறையாக தமிழகம் வந்து சென்றிருக்கிறார்.
பாஜக பிரசாரத்தை கலர்ஃபுல் ஆக்கும் வகையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யா நாத், அகில இந்திய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் தமிழகம் வந்து சென்றிருக்கின்றனர்.
இப்படி அகில இந்திய தலைவர்கள், பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் என டெல்லி பாஜக மேலிடத் தலைவர்கள் பலர் தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போதும், பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா போட்டியிடும் காரைக்குடி தொகுதி பக்கமே எட்டிப் பார்க்கவில்லையே.. நொந்து போய் கிடக்கிறாராம் ஹெச். ராஜா.
நேற்றைய தினம் மட்டும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆகியோர் தமிழகத்தில் இரண்டு இடங்களில் பிரசாரம் செய்திருக்கிறார்கள். ராஜ்நாத் சிங் உதகையில் பிரசாரம் செய்து இருக்கிறார். தளி சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டிருக்கிறார் ராஜ்நாத். ஆனால், அவர் காரைக்குடிக்கு செல்லவில்லை. இடைப்பட்ட நேரத்தில் காரைக்குடியில் பிரசாரம் மேற்கொள்வதில் ராஜ்நாத் சிங்கிற்கு சிரமம் ஒன்றும் இருந்திருக்காது. ஆனால், ஹெச். ராஜாவை அம்போ என்று விட்டு விட்டார் ராஜ்நாத் சிங். இத்தனைக்கும் அவரின் முந்தைய சேலம் பிரசார பொதுக்கூட்டத்தின் பேச்சை, ஹெச். ராஜாதான் மொழி பெயர்த்தார்.
அடுத்து உத்தரப்பிரசேத முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவையில் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். அடுத்து விருதுநகரிலும் அவர் பாஜக வேட்பாளரை ஆதரித்து பேசியிருக்கிறார். இந்த இரண்டு ஊருக்கும் இடைபட்ட இடத்தில்தான் காரைக்குடி இருக்கிறது. ஆனால், ஹெச்.ராஜாவை ஆதரித்து பிரசாரத்திற்கு யோகி செல்லவில்லை.
இப்படி திட்டமிட்டே ஹெச் ராஜாவை பாஜக மேலிட தலைவர்கள், பிரதமர் உள்ளிட்டமத்திய அமைச்சர்கள் புறக்கணித்து வருகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட காரைக்குடி பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் ஹெச்.ராஜாவுடன் ஒட்டிக் கொண்டிருந்தால், தங்களின் அரசியல் வாழ்க்கை பிரகாசமாக இருக்காது என்று கூறி, செல்வாக்குள்ள மற்ற நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிக்கு படையெடுத்து சென்றுவிட்டதாக தகல்கள் கிடைத்துள்ளது.
இத்தனைக்கும் முந்தா நேர்ந்து பாஜக.வில் சேர்ந்த நடிகை குஷ்புவை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி பிரசாரம் செய்கிறார். ஆனால், தமிழகத்திலேயே பாஜக.வை தான்தான் தூக்கி நிறுத்தினேன். நிறுத்திக் கொண்டே இருக்கிறேன் என்று கூக்குரல் கொடுக்கும் ஹெச். ராஜாவை எல்லோரும் அம்போ என்று விட்டது ஏன்? என்ற கேள்விதான், தமிழக பாஜக.வில் உள்ள குறிப்பிட்ட ஒருபிரிவு நிர்வாகிகளிடம் அனலாக இருக்கிறது.
இந்தத பக்கத்தில் உள்ள அனைத்து புகைப்படங்களும், செய்திகளும், தமிழக பாஜக.வின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இருந்து பதிவேற்றியதுதான். நேற்றைய பிரசாரத்தில் ஹெச். ராஜா, தனிப்பட்ட முறையில் தனியொருவராக அவரது தொகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டதாக செய்திகூட தமிழ்நாடு பாஜக.வின் அதிகார டிவிட்டர் பக்கத்தில் இல்லை. அப்புறம் புகைப்படம் எங்கே பதிவிடப் போகிறது.
பாஜக.வின் இளம் வேட்பாளரான துறைமுகம் வினோத்தின் வாக்கு சேகரிப்பு புகைப்படம் கூட, பாஜக டிவிட்டர் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் போது, ஹெச்.ராஜாவைப் பற்றி ஒரு வரி செய்தி கூட அந்த பக்கத்தில் இல்லையே…அப்போ., ஹெச். ராஜா டம்மி பீஸ்தானா என்று நொந்து கொள்கிறார்கள் காரைக்குடி பாஜக நிர்வாகிகள்..எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று ஹெச். ராஜாவின் மைன்ட் வாய்ஸ், சத்தமாகவே கேட்கிறது. பாவம் மானஸ்தன்…
விருதுநகர் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார்.
.
தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் டாக்டர் முருகன், தனது தொகுதிக்குட்பட்ட மூலனூர் ஒன்றியத்தில் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது பொதுமக்கள் தனக்கு அணிவிக்க முயன்ற பொன்னாடைகளை தாய்மார்களுக்கு அணிவித்தார். அவரின் பெருந்தன்மையைப் பார்த்து கிராம மக்கள் நெகிழ்ந்துப் போனார்கள்.
உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் M.போஜராஜனை ஆதரித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தாமரை சின்னத்திற்கு உதகை நகரில் திறந்த வாகனத்தில் சென்று வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார்.
..
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு வாக்குகள் கேட்டு கோவை வருகை தந்த உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத்துக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து யோகி, பரப்புரை மேற்கொண்டார்.
குளச்சல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் P.ரமேஷை ஆதரித்து மாநில செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான நமிதா தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார். வேட்பாளர் முகத்தில் என்னா சிரிப்பு……
…நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் எம்.ஆர். காந்தியை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்தார்.
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார்.
துறைமுகம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வினோஜ் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகிளில் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார்.
ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் குஷ்பு சுந்தர், தான் போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்த போது விளிம்பு நிலை மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
.உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் M.போஜராஜன் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தளி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நாகேஷ் குமார் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தளி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் .நாகேஷ் குமாரை ஆதரித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தளியில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பரப்புரை மேற்கொண்டார்.
.கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி இரையுமன்துறை, பூத்துறை பகுதிகளில் நடைபெற்ற வாகனப் பிரச்சாரத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தாமரைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
…
கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எம்.ஆர்.காந்தி ஆகியோர் இணைந்து வீதி வீதியாகச் சென்று தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தனர்.